WhatsApp Image 2024-09-22 at 12.29.13_0355574a

சென்னை, அண்ணா நகர் கிழக்கு இரண்டாம் முதன்மைச் சாலைக்கு ஒளவை நடராசன் முதன்மைச் சாலை என பெயர்!

தமிழ் கம்ப்யூட்டர்
செப்டம்பர் 01 – 15, 2024,
பக்கம் 11 – 12

சென்னை, அண்ணா நகர் கிழக்கு இரண்டாம் முதன்மைச் சாலைக்கு ஒளவை நடராசன் முதன்மைச் சாலை என பெயர்!

இரண்டாம் முதன்மைச் சாலைக்கு ஒளவை நடராசன் முதன்மைச் சாலை என பெயர் சூட்டுவதற்கு தீர்மானம் இயற்றப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள செய்யாறில்,

உலகம்மாள்
உரைவேந்தர் ஒளவை துரைசாமி ஆகியோருக்கு மகனாக 1936 ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 24 அன்று பிறந்த ஒளவை நடராசன் அவர்கள்.

தனது இளமைக் காலத்தில் திருப்பதி, அண்ணாமலை நகர் ஆகிய இடங்களில் பள்ளிப் படிப்பையும். மதுரை தியாகராசர் கல்லூரியில் முதுகலைப் பட்டமும், சென்னை பச்சையப்பன் கல்லூரியில் முனைவர் பட்டமும் பெற்றார்.

அவர் பெற்ற தமிழ்ப் புலமையால் கல்லூரிகளில் பணியாற்றி உள்ளார் விரிவுரையாளராகப்

மேலும் அவரிடம் பயின்ற மாணவர்கள் பலர் அரசியல் தலைவர்களாகவும், சட்டமன்ற. நாடளுமன்ற உறுப்பினர் களாகவும், கல்வியாளர்களாகவும். இலக்கிய ஆளுமையாளர்களாகவும் இன்றளவும் தடம் பதித்து வருகின்றனர்.

கல்விப் பணிகளில் மட்டுமின்றி நிருவாகப்
பணிகளிலும் உறுதிப்படுத்திய தனது ஆளுமையை ஔவை நடராசன் அவர்கள்,
செய்தித் துறையின் துணை இயக்குநராகவும். மொழிபெயர்ப்புத் துறை இயக்குநராகவும்.
தமிழ் வளர்ச்சித் துறையின் செயலராகவும், தமிழ்ப் பல்கலைக்கழக துணை வேந்தராகவும், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் துணைத் தலைவராகவும் தனது முத்திரையைப் பதித்து முத்தமிழறிஞர் மு. கருணாநிதி உள்ளிட்ட மூன்று மேனாள் முதலமைச்சர்களிடமும் பணியாற்றிய பெருமைக்குச் சொந்தக்காரரர் ஆவார். என்றும்,

சங்க இலக்கிய ஆய்வில் புலமைச் செவ்வியர்’ என்னும் நூலும், கம்பரின் காவியத்தைப் பற்றி அவர் எழுதிய கட்டுரைத் தொகுப்புகள் கம்பர் விருந்து’ என்னும் பெயரிலும், வள்ளலார் நூற்றாண்டு விழாவில் அவர் ஆற்றிய சொற்பொழிவு வாழ்விக்க வந்த வள்ளலார்’ என்னும் தலைப்பிலும் நூலாக வெளிவந்து உள்ளன..

மகாகவி பாரதியார் குறித்து அவர் ஆற்றிய உரைகள் எழுதிய கட்டுரைகள் பாரதி பல்சுவை என்னும் தலைப்பில் நூலாக வெளிவந்து உள்ளது.

பேரறிஞர் அண்ணாவின் பன்முகம் என்னும் தலைப்பிலும் நூலைப் படைத்து உள்ளார். .

இலங்கை கம்பர் கழகத்தின் சார்பில், தன்னேரிலாத தமிழ் மகன் விருதும்,

மதுரைக் காமராசர் பல்கலைக் கழகம் சார்பில், ‘தமிழ்ப் பேரவைச் செம்மல் விருதும்.

தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருதும்,

இவரது வாழ்நாள் சாதனை களைப் பெருமைப் படுத்தும் வகையில் இந்திய அரசின் உயரிய விருதான பத்மஸ்ரீ விருதும் தமிழறிஞர் ஒளவை நடராசன் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

ஆதலால், மருத்துவர் து. மெய்கண்டான் அவர்கள் தமிழறிஞர் ஒளவை நடராசன் அவர்கள் வசித்து வந்த தாரகை இல்லம் அமைந்து உள்ள அண்ணா நகர். கிழக்கு (ஜே 82). இரண்டாம் முதன்மைச் சாலைக்கு ‘ஒளவை நடராசன் முதன்மைச் சாலை’ என பெயர் சூட்டுமாறு கேட்டுக் கொண்டதை அடுத்து,

‘ஔவை நடராசன் முதன்மைச் சாலை’ என பெயர் சூட்டுவற்கு பெருநகர சென்னை மாநகராட்சி மாமன்றத்தின் முன் ஒப்புதலுக்கு வைத்திட அரசால் அனுமதி அளிக்கப்பட்டது.

தமிழ் வளர்ச்சி இயக்குநர் அவர்களின் கடிதத்தின் அடிப்படையில்,

மறைந்த ஒளவை நடராசன் அவர்களின் சாதனைகளை பெருமைப்படுத்தும் விதமாக அவர் வாழ்ந்த சென்னை அண்ணா நகர் கிழக்கு (ஜே 82) இரண்டாம் முதன்மைச் சாலைக்கு ஒளவை நடராசன் முதன்மைச் சாலை என பெயர் சூட்ட 8வது மண்டல வார்டு நிலம் மற்றும் உடைமைத்துறைக்கு மாமன்றத்தால் பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *