POST: 2024-10-02T09:34:15+05:30

இராமலிங்கர் பணிமன்றம் ஏ.வி.எம். அறக்கட்டளை
இணைந்து நடத்தும்
57ஆம் ஆண்டு அருட்பிரகாச வள்ளலார் மகாத்மா காந்தி விழா அழைப்பிதழ்

நாள்:

1.10.2024 செவ்வாய்க் கிழமை முதல் 3.10.2024
வியாழக் கிழமை வரை
இடம் :
முத்தமிழ்ப் பேரவை
திருவாவடுதுறை டி.ஆர்.இராஜரத்தினம் கலை அரங்கம் (சத்யா ஸ்டுடியோ எதிரில்) இராஜா அண்ணாமலைபுரம், சென்னை 600 028.
2024
அருட்செல்வர் நா.மகாலிங்கம் மொழிபெயர்ப்பு விருதிகள்
அருட்செல்வர் நா.மகாலிங்கம் மொழிபெயர்ப்பு மைய நூல்கள் வெளியீடு
மாநில அளவிலான போட்டிகளில் வென்ற மாணவ மாணவியர்க்கு பரிசளிப்பு

வாழ்க காந்தியம்!
அருட்பெருஞ்சோதி!
தனிப்பெருங்கருணை!
வளர்க சன்மார்க்கம்!
அருட்பெருஞ்சோதி!
அருட்பெருஞ்சோதி!
பெருந்தகையீர், வணக்கம்.
அருட்செல்வர் அவர்களால் தோற்றுவிக்கப்பட்ட இராமலிங்கர் பணிமன்றம், ஏ.வி.எம். அறக்கட்டளையுடன் இணைந்து நடத்தும் 57ஆம் ஆண்டு அருட்பிரகாச வள்ளலார் மகாத்மா காந்தி விழா, சென்னை, இராஜா அண்ணாமலைபுரம், முத்தமிழ்ப் பேரவை, திருவாவடுதுறை டி.ஆர்.இராஜரத்தினம் கலை அரங்கத்தில் 1.10.2024 செவ்வாய்க்கிழமை முதல் 3.10.2024 வியாழக்கிழமை வரை இனிதே நடைபெறவுள்ளது.
இவ்வாண்டு மகாத்மாகாந்தி அடிகளின் பிறந்த நாள், திருஅருட்பிரகாச வள்ளலார் திருஅவதாரத் திருநாள், அருட்செல்வர் அவர்களின் நினைவு நாள் என இவற்றைப் போற்றிச் சிறப்பிக்கும் வகையில் இளையோர் அரங்கம், கவியரங்கம், உரையரங்கம், பட்டிமன்றம் எனப் பல்வேறு நிகழ்ச்சிகள் சிறப்பாக நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
தமிழகமெங்கும் பள்ளி, கல்லூரி மாணவ மாணவியருக்கு நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசளிப்பு பாராட்டு மற்றும் மொழிபெயர்ப்பாளர்களுக்கு விருதுகள் வழங்குதலும் சிறப்பாக நடைபெற உள்ளன.
அருட்செல்வர் நா. மகாலிங்கம் மொழிபெயர்ப்பு மையத்தின் புதிய நூல்கள் மற்றும் வர்த்தமானன் பதிப்பக நூல்களும் வெளியிடப்படுகின்றன.
இவ்வினிய விழாவில் நீதியரசர் திரு. V.இராமசுப்பிரமணியம், குன்றக்குடி குருமகா சன்னிதானம் தவத்திரு பொன்னம்பல அடிகளார், முனைவர் ஒளவை ந.அருள், கலைமாமணி திருப்பூர் கிருஷ்ணன், பேராசிரியர் ய. மணிகண்டன், வழக்கறிஞர் ஸ்டாலின் குணசேகரன், மூத்த வழக்கறிஞர் த. இராமலிங்கம், டாக்டர் பி.கே. கிருஷ்ணராஜ் வாணவராயர், சொல்வேந்தர் சுகி சிவம் ஆகியோருடன் சீர்மிகு சான்றோர்கள் பலரும் பங்கேற்று நல்லுரை நிகழ்த்தவிருக்கின்றனர்.
விழாவிற்கு அனைவரும் வருகைதந்து சிறப்பிக்க வேண்டுகிறோம்.
அன்புடன்,
ம.மாணிக்கம்)
தலைவர், இராமலிங்கர் பணிமன்றம்

அருட்பிரகாச வள்ளலார் மகாத்மா காந்தி விழா

2.10.2024
புதன் கிழமை
காலை 9.00 மணி மகாத்மா காந்தி மற்றும் அருட்செல்வர் திருவுருவப் படங்களுக்கு மலரஞ்சலி செலுத்துதல் (மகாத்மா காந்தி நினைவுப் பாடல்கள் இசைத்தல்)
இறைவணக்கம்
திருவாசகச் செந்நாவலர் சற்குருநாதன் ஓதுவார்

வரவேற்புரை
முனைவர் ஔவை ந. அருள் இயக்குநர், தமிழ் வளர்ச்சித்துறை, தமிழ்நாடு அரசு

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *