வீரம் , செல்வம், கல்வி, வேண்டி மூன்று பெரும் தேவியர்களுக்கு விழா எடுப்பதையே திருமகள் பூசை என்று அழைக்கின்றோம்.
இது பத்து நாள்கள் கொண்டாடப்படுகிறது.
முதல் மூன்று நாள்களும் வீரத்தைத் தரும் கொற்றவை தேவியாகவும் ,
அடுத்த மூன்று நாள்களும் செல்வத்தைத் தரும் திருமகள் தேவியாகவும் ,
இறுதி மூன்று நாட்களும் கல்வியைத் தரும் கலைமகள் வடிவாகவும் கொண்டாடப்படுகிறது.













இறுதி நாள் விஜயதசமி என்றழைக்கப்படுகிறது.
அலைமகள் கலைமகள் திருமகள் திருநாளை முன்னிட்டு 10.10.2024, வியாழக்கிழமை மாலை தமிழ் வளர்ச்சித் துறையின் துணை இயக்குநர்கள், கண்காணிப்பாளர்கள் உதவியாளர்கள் தட்டச்சர்கள் அலுவலக உதவியாளர்கள் ஓட்டுநர்கள் புடை சூழ சிறப்பு வழிப்பாட்டில் கலந்து கொள்ளும் வாய்ப்பு எனக்குக் கிடைக்கப்பெற்றது
அவ்வண்ணமே நான் மாடக் கூடலில் அமைந்துள்ள உலகத் தமிழ் சங்க வளாகத்தில் தமிழ் வளர்ச்சித் துறை கண்காணிப்பாளர் ஒருங்கிணைப்பில் சங்கத்தில் பணியாற்றும் உதவியாளர்கள் ஒன்று கூடி சிறப்பு வழிபாடு செய்தனர்.
அண்ணாநகர் இல்லத்தில்
11 10 2024 வெள்ளிக்கிழமை மருத்துவமாமணி தாரா அம்மா மற்றும் பத்மஸ்ரீ ஔவை நடராசன் அப்பாவின் நினைவாகவும் தாரகை இல்லத்தில்பணியாற்றும் பணியாளர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டது.
Add a Comment