
நேரில் சந்தித்ததில்லை!
வணிக உறவுமில்லை!
பணியாற்றியதும் இல்லை!
சொந்தக்காரரும் இல்லை !
இவ்வளவு இன்மையிலும்
உண்மையாகவே உங்கள் மறைவுச் செய்தி உள்ளத்தில் வலிக்கிறது.
எங்கள் இல்லத்தில் கரையும் உப்பாகவோ
குடிக்கும் காப்பியாகவோ தேநீராகவோ
குளிக்கும் சோப்பாகவோ
இருந்ததன் காரணமாக உங்கள் இழப்பு மட்டும் வலிக்கிறது.
பார் போற்றும்
பாரத நாட்டின் வணிக வேந்தர்
திரு ரத்தன் டாடா மறைந்த செய்தி கேட்டு சில நிமிடம் என்னை மறந்தேன்…
என் தாத்தா முதல் மகள் வரை வணிகத்தில்
உயர்வு -நேர்மை- முறைமை என்றால் டாடா என்றுதான் பொருள் கொண்டிருந்தோம்
தாஜ் ஐமீன் உணவகம்
ஏர் இந்தியா வானூர்தி
டைட்டன் கைக்கடிகாரம்
டாட்டா கணினி நிறுவனம்
ஒரு லட்சம் விலையிலான நானோ சீருந்து
தொலைக்காட்சி வானில் மிளிரும் டாட்டா ஸ்கை
வோல்டாஸ் குளிர்சாதனப்
பெட்டி
வெஸ்ட் சைட் துணிக்கடை
செல்பேசியில் தட்டிய வேகத்தில் காய் கனிகளை இல்லத்திற்கு தட்டாமல் கொண்டு சேர்க்கும்
பிக் பாஸ்கட்
நுகர் பொருள் வகைகள்
அங்கிங்கெனாதபடி
எங்கும் நிறைந்த டாட்டா…
ரத்தன் டாட்டா மறைந்த பிறகும்
இவையனைத்தும் நீடித்து நிலைத்தாலும்
உங்கள் செம்மாந்த உருவம் எங்கள் உள்ளத்தில் மங்காமல் பதிந்திருக்கும்.
இந்திய மண்ணின் வணிகப்
பெருமிதமே!
உயர் இரத்தினமே!
ரத்தன் டாட்டாவுக்கு
புகழ் வணக்கம்….!
Add a Comment