உலகத் தமிழர்களின் தாய் மொழியாம் தமிழ் மொழியின் வளர்ச்சிக்காக,
1981 ஆம் ஆண்டு செப்டம்பர்த் திங்கள், 15 ஆம் நாளில் தஞ்சாவூரில் தோற்றுவிக்கப்பட்ட,
தமிழ்ப்பல்கலைக்கழகத்தின் பதினான்காவது பட்டமளிப்பு விழா தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் கரிகாலற் சோழன் அரங்கில் திருவள்ளுவர் ஆண்டு 2055, ஐப்பசித்திங்கள் இரண்டாம் நாள் நாள் 19.10.24, சனிக்கிழமை நடைபெற்றது.
விழாவில் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் முதுகலை
முது அறிவியல் மற்றும்
இளங்கல்வியியல் பட்டம் பெற்றவர்களில் முதல் இடம் பெற்று தங்கப்பதக்கம் பெற்ற ஏழு மாணவிகள் மற்றும் ஒரு மாணவர் பெயர்களை விளித்து
ஆட்சிக்குழு உறுப்பினர் என்ற வகையில் இரு முறை மேடையில் அறிவிப்பதற்கு
நல்வாய்ப்பு கிடைக்கப் பெற்றேன்.
Add a Comment