காலை தொடங்கி மாலை வரை அரசு அலுவலர்களுக்கு ஆட்சி மொழித் திட்டச் செயல்பாடுகள் குறித்துக் கருத்துரை வழங்கிக் கவின்சேர்க்கும் முயற்சி நிறைவு தந்தது.
ஒரே நாளில் மூன்று அலுவலகங்களில் நடைபெற்ற ஆட்சி மொழித் தொடர்பான கலந்தாய்வுக் கூட்டங்களில் பங்கேற்று துறை அலுவலர்கள்,மற்றும் பணியாளர்களுக்கு ஆன்ற அறிவுரை வழங்கினேன்.
கோப்பு நடவடிக்கைகள் யாவும் அனைத்து நிலையிலும் நூற்றுக்கு நூறு தமிழிலேயே அமைய வேண்டும்.
அரசு ஆணைகள், மற்றும் அறிவுரைகளால் மட்டுமே ஆட்சி மொழித் திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்றிட முடியாது.
அலுவலர்களின் ஈடுபாடு, ஆர்வம், தேடல், செயல்திறன் மூலம்தான் திட்டத்தின் இலக்கை நாம் அடைய முடியும்
என்பன போன்ற பல தகவல்களை இயல்பாக விரித்துரைத்தேன்.
அரிய சொற்களையும், தேவைக்கு உரிய சொற்களையும் பெற,
ஆட்சி மொழி அகராதியைப் பயன்படுத்துவதன் அவசியத்தையும் வலியுறுத்தினேன்.
ஆட்சி மொழிச் சட்டம் நிறைவேற்றப்பட்டு அறுபத்தேழு ஆண்டுகள் ஆகியும், அகம் பூக்கும் ஆக்கம் முழுமை பெறாதிருப்பதை முன்வைத்துப் பேசி உரை ஆற்றினேன்.
மூவிடத்திலும் மலர்ந்து கேட்ட முகங்கள் அனைத்திலும், முகிழ்த்துக் கிளம்பிய ஆய்வு முன்னேற்ற அறிக்கையினை பெரு மகிழ்ச்சியுடன் உயர் அலுவலர்களிடம் வழங்கினேன்.
கலந்தாய்வு நிகழ்ந்த இடங்கள்:
- அண்ணா நிருவாக பயிற்சிக் கல்லூரி அலுவலகத்தில்
காலை 11.30 மணி
- அரசுத் தேர்வுகள் இயக்ககத்தில்
மாலை 3.30 மணி
- தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் நிறுவனம்
மாலை 4.30 மணி
Add a Comment