நாடறிந்த பெருந்தகையும் – நல்லவர் நெஞ்சிலெல்லாம் புகழ் மணக்க வாழும் பட்டு வணிகத் திலகமாகவும், இசை ,நாடகம் ,
ஆடல் ,ஆவணம் ,மொழியாக்கம்
தேசியம் , தெய்வவிகம், பாரதியும், உடல்நலம் ,
வணிக நுணுக்கம் முதலிய துறைகளில் தோய்ந்த பெருமிதம் கொண்டவரும் கலைகளைக் காக்கும் கரமாக மிளிரும்
பத்மஸ்ரீ நல்லி செட்டியார் பழுத்த சிந்தனையும் ,
எழுத்து வன்மையும் ஒரு சேரக் கொண்டவர் .
உள்ளத்தில் பட்டதை – உண்மை என்றுணர்ந்ததை உலகுக்கு ஏற்றம் தரும் கருத்துக்களை
,சிந்தனைக்குரிய செய்திகளைத் தொகுத்து, நம் முன்னால் நின்று தொட்டுப் பேசும் பரிவு கொண்டவராவார்.
பிறந்த நாள் விழாக் காணும் அருமை நல்லி செட்டியார் மேலும் ஆயிரம் பிறை காணுமாறு
வாழ்த்தி வணங்குகிறேன்
உடுப்பதும் , உரைப்பதும் , நடப்பதும் பால் வெண்மைப்
பளிங்காக உலா வரும் நல்லி செட்டியார் பழந்தமிழ் வள்ளல் நள்ளியை நமக்கு நினைவூட்டுகிறார் .
அரிய புதிய நூல்களைப் பற்றி பார்த்தீர்களா ?
என்று விழாக்களில்
எந்தையார் கேட்டால் ?
உடனே அந்நூலை இரண்டு படிகள் வாங்கி அப்பாவுக்கும் – அவர் படித்து மகிழும் நூலகத்துக்கும் ஒரு படி வாங்கி அனுப்பும் கல்வி மனம் அவருக்கு எப்போதும் உண்டு .
உரையாடலாக தம் கருத்தைப் பகிர்ந்து கொள்ளும் திறம் பத்மஸ்ரீ நல்லி செட்டியாரின் தனிப் பாங்காகும்.
பரிவின் பிழம்பாகிய பத்மஸ்ரீ நல்லி செட்டியார் பல்லாண்டு பல்லாண்டு வாழ்க !
இவருக்கா எண்பத்து ஐந்து அகவை
எவர் நம்புவது !
எல்லோரும் இப்படித்தான் கேட்பார்கள் .
இளமைக்கு இளமையும் , தலைமைக்குத் தலைமையும், தகுதிக்குத் தகுதியும் ,
ஒருங்கே பெற்றவராவார்
வாழ்க நல்லியார்.
ஔவை அருள்
9.11.24
Add a Comment