09.11.2024
தினமணி பக்கம் எண் – 20
தினகரன் பக்கம் எண் – 09
முரசொலி பக்கம் எண் – 01
மக்கள் குரல் பக்கம் எண் – 07
டிரினிடி மிரர் பக்கம் எண் – 01
மாலை முரசு பக்கம் எண் – 05
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (8.11.2024) தலைமைச் செயலகத்தில், 2024,ஆம் ஆண்டிற்கான செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தால் வழங்கப்படும் கலைஞர் மு. கருணாநிதி செம்மொழித் தமிழ் விருதிற்குத் தேர்வு செய்யப்பட்ட சென்னைப் பல்கலைக்கழக மேனாள் தமிழ்ப் பேராசிரியர் முனைவர் மா. செல்வராசன் அவர்களுக்கு கலைஞர் மு. கருணாநிதி செம்மொழித் தமிழ் விருதுடன் ரூபாய் 10 இலட்சம் பரிசுத் தொகையும், பாராட்டுச் சான்றிதழும், வெண்கலத்தாலான கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் திருவுருவச்சிலையையும் வழங்கி சிறப்பித்தார்.
இந்த நிகழ்ச்சியில், மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் திரு.மு.பெ. சாமிநாதன், தலைமைச் செயலாளர் திரு. நா. முருகானந்தம், இ.ஆ.ப., தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலாளர் திரு.வே. ராஜாராமன், இ.ஆ.ப.
தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர் முனைவர் ஔவை. ந. அருள்,
செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவன துணைத் தலைவர் பேராசிரியர் மருத்துவர் சுதா சேஷய்யன், இயக்குநர் பேராசிரியர் இரா. சந்திரசேகரன், பதிவாளர் முனைவர் ரெ. புவனேஸ்வரி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Add a Comment