தியாகராயர் நகரில் உதயம் ராம் அவர்களின் உரத்த சிந்தனை கூட்டத்திலும்(24.2.2024)
சோழிங்கநல்லூரில் கவிஞர் ராசி அழகப்பன் அவர்களின் வாழ்வரசியாரின்
பணி ஓய்வு பெறுவதை ஒட்டி நடைபெற்ற விடைநல்கு விழாவிலும் (2.6.24)
மேடையில் நடிகர் டெல்லி கணேஷ் அவர்களுடன் இணைந்து பேசுகின்ற நல்வாய்ப்பு இருமுறை கிடைக்கப்பெற்றேன்.
மேடையில் நான் பேசிக் கொண்டிருக்கும்பொழுதே அவர் அண்ணாந்து பார்த்துக்கொண்டு யாவரும் கேட்கும் வண்ணம் என்ன அதிசயம் எங்கள் ஐயா ஔவை நடராசன் பேசுவதைப் போலவே பேசுகிறானே என்று உரக்கச் சொல்வதைக் கேட்டேன்.
திரையில் பார்த்தாலும்
நேரில் பழகினாலும் அச்சு அப்படியே அவர் பேசுவதும் பழகுவதும் ஒன்றாகவே தோன்றும்.
இயல்பாக அவர் நடந்து கொண்ட விதமாகவே திரையிலும் மின்னி மிளிர்ந்தார்.
தற்கால இளைஞர்களைப் போல நீல வண்ண ஜீன்ஸ் அணிந்துக் கொண்டு ஜிப்பாவை முறுக்கிக் கொண்டு குறும்புப்பார்வையுடன்
சிரித்த முகத்துடன்
பல் சுவை நடிப்புச் சுடரின் காட்சி ஐந்து திங்களில் படமாக படிந்து விட்டதே என்ற ஏக்கம் தான் எனக்கு அதிகம்…
நாயகன் திரைப்படத்தில் அவர் நடித்தக் காட்சிகளை குறித்து அவரிடம் அளவளாவிய பொழுது மகிழ்ச்சியில் ஆழ்ந்தார்..
உதயம் ராம் அருமையாக தினமணியில் டெல்லி கணேஷ் அவர்களைக் குறித்து எழுதிய நடுப்பக்க கட்டுரையினை வருங்காலம் பாடமாக படிக்கலாம்.
அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் குறிப்பாக உரத்த சிந்தனை அமைப்பினருக்கும் ஆழ்ந்த இரங்கல்
Add a Comment