இரங்குகிறேன்
எளிமையின் உருவமாகவும் எந்நேரமும் திராவிடப் பல்கலைக்கழகத்தின் பணிகளைக் குறித்து மட்டுமே தொலைபேசி வாயிலாகவும் நேரிலும் பேசி வந்த நண்பர் தான் முனைவர்
பா. ஆ முனுசாமி அவர்கள் ஆவார்கள்..
தமிழ் வளர்ச்சித் துறையின் மேனாள் இயக்குநர் முனைவர் கா.மு. சேகர் அவர்களின் வகுப்புத் தோழர்
திருப்பதி திருவேங்கடவன் பல்கலைக்கழகத்தின் தமிழ்த் துறையில் முனைவர் பட்டமாக திருமூலரும் வேமண்ணா ஒப்பாய்வில் முனைவர் பட்டம் பெற்று கடந்த 21 ஆண்டுகளாக குப்பத்தில் உள்ள திராவிடப் பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழி மற்றும் மொழிபெயர்ப்பு ஆய்வுத் துறையில் விரிவுரையாளராகவும் ஆய்வு வளமையாராகவும் பணியாற்றிக் கொண்டிருந்த பண்பாளர் திடுமென காலமானார் என்ற துயரச்செய்தி ஆழ்ந்த வருத்தத்தை ஏற்படுத்தியது.
ஒரு வாரத்திற்கு முன்பு
தான் ஓய்வு பெற்று விட்டேன் என்றாலும் திராவிடப் பல்கலைக்கழகத்தில் தனக்கு நீட்டிப்பு வழங்கி இருக்கிறார்கள் என்ற மகிழ்ச்சிக்குரலோடு சொல்லி நேரில் வந்து பார்த்துப்பேசுகிறேன் என்று சொன்ன முனுசாமிக்கு (4.7.1963-11.12.2024)
என்ன அவசரம்?
தமிழ்நாடு தேர்வாணையத் தேர்வில் வெற்றி பெற்று தலைமைச் செயலகத்தில் தன்னுடைய மகள் பணியாற்றுகிறார் என்று பெருமிதமாக சொல்லி மகிழ்ந்த தந்தையின் பிரிவினை எப்படி குடும்பம் தாங்கும்?
நெருநல் உளனொருவன் இன்று இல்லை என்ற திருக்குறள் சொல்லை நம்மால் வெல்லவே முடிவதில்லை…
ஆழ்ந்த இரங்கல்

Add a Comment