ஆலோசனை குழு கூட்டம்:
சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர் மு.பெ. சாமிநாதன் தலைமையில்
அய்யன் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழாவினை ஒட்டி வெளியிடப்பட உள்ள வெள்ளி விழா சிறப்பு மலர் 2025 தயாரிப்பு பணிகள் தொடர்பான ஆலோசனை குழு கூட்டம் 17.12.24 செவ்வாய்க்கிழமையன்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அரசு செயலாளர் ராஜாராமன்,
செய்தி மக்கள் தொடர்ப்பு துறை இயக்குநர் வைத்திநாதன்,
தமிழ் வளர்ச்சி துறை இயக்குநர் அருள்,
செய்தி மக்கள் தொடர்பு துறை கூடுதல் இயக்குநர் அன்புச் சோழன்,
மலர் குழு உறுப்பினர்களான பேராசிரியர் சுப. வீரபாண்டியன், மூத்த பத்திரிகையாளர்
திருமாவேலன்,
பேராசிரியர் இளமாறன், பேராசிரியை சுடர்விழி,
புலவர் முத்துவாவாசி,
சித்தானை, தங்கபாண்டியன் மற்றும் ஒருங்கிணைப்பாளர்களான தமிழ்நாடு இணைய வழி கல்வி கழக இணை இயக்குநர் கோமகன்,
செய்தி மக்கள் தொடர்பு துறை இணை இயக்குநர் அண்ணா ஆகியோர் கலந்து கொண்டனர்.

Add a Comment