துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் செவ்வாய்க்கிழமை, 24.12.24 அன்று
சென்னை அண்ணா சாலை பல்லவன் இல்ல மாநகர் போக்குவரத்துக் கழக மத்திய பணிமனையில் நடைபெற்ற நிகழ்வில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களால் கன்னியாகுமரியில் நிறுவப்பட்ட ஐயன் திருவள்ளுவர் சிலையின் வெள்ளி விழா கொண்டாட்டத்தையொட்டி
பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்ட தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக விரைவு பேருந்துகளின் பயணத்தை கொடியசைத்து தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
இந்நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர்
மு பே சாமிநாதன்
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன்
சென்னை பெருநகர மாநகராட்சி மேயர் திருமதி ஆர் பிரியா
போக்குவரத்துத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் க.பணீந்திர ரெட்டி,
தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலாளர் வே. ராஜாராமன்,
மாநகர் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ்,
செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் மரு. இரா வைத்திநாதன்,
தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் முனைவர் ந.அருள்
நிலைக்குழுத் தலைவர் (பணிகள்) நே.சிற்றரசு
மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Add a Comment