வள்ளுவம் போற்றுதும் வெள்ளி விழா 25
முக்கடல் சூழும் குமரி முனையில்
அய்யன் திருவள்ளுவர் சிலை
வெள்ளி விழா
30.12.2024 – 1.1.2025
வள்ளுவம் போற்றுதும் வெள்ளி விழா 25
முக்கடல் சூழும் குமரி முனையில்
அய்யன் திருவள்ளுவர் சிலை
வெள்ளி விழா
30.12.2024 – 1.1.2025
முக்கடல் சூழும் குமரி முனையில் அய்யன் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா
அய்யன் திருவள்ளுவர் சிலையை விவேகானந்தர் பாறையுடன் இணைக்கும் கண்ணாடி இழைப் பாலம் திறப்பு
வெள்ளி விழா சிறப்பு மலர் வெளியிடுதல்
திருக்குறள் கண்காட்சி தொடங்கி வைத்தல்
அய்யன் திருவள்ளுவர் தோரணவாயில் அடிக்கல் நாட்டுதல்
அன்புடையீர் வணக்கம்,
நிகழும் திருவள்ளுவர் ஆண்டு 2055, மார்கழித் திங்கள் 15 முதல் 17 வரை (30.12.2024 – 1.1.2025) முக்கடல் சூழும் குமரிமுனைக் கடல் நடுவே முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களால் 133 அடி உயரமுடைய அய்யன் திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவு பெறுவதையொட்டி தமிழ்நாடு அரசின் சார்பில் வெள்ளி விழா மூன்று நாள்கள் கொண்டாடப்படுகிறது.
இவ்விழாவில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள், மாண்புமிகு மேயர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், தமிழ் அறிஞர்கள், சீர்மிகு பெருமக்கள் பங்கேற்றுச் சிறப்பிக்கிறார்கள்.
தாங்கள் வருகை தந்து சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கிறோம்.
நா.முருகானந்தம், இ.ஆ.ப.,
தலைமைச் செயலாளர்
முதல் நாள் நிகழ்ச்சி
30.12.2024 திங்கட்கிழமை மாலை 5.00 மணி
தமிழ்த்தாய் வாழ்த்து
அய்யன் திருவள்ளுவர் சிலையை விவேகானந்தர் பாறையுடன் இணைக்கும் கண்ணாடி இழைப் பாலத்தினைத் திறந்து வைத்து, திருக்குறள் நெறி பரப்பும் 25 தகைமையாளர்களுக்குச் சிறப்புப் பரிசுகள் வழங்குபவர்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்
திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள்
சிறப்புப் பட்டிமன்றம் மாலை 7.00 மணி
திருக்குறளால் அதிக நன்மை – தனி மனிதருக்கே! சமுதாயத்திற்கே!!
நடுவர்
கலைமாமணி சொல்வேந்தர் திரு. சுகி சிவம் அவர்கள்
தனி மனிதருக்கே! | சமுதாயத்திற்கே!
திரு. தா.இராஜாராம் அவர்கள் |
திரு. சே.மோகனசுந்தரம் அவர்கள் |
புலவர் இரெ.சண்முகவடிவேல் அவர்கள்
பேராசிரியர் பர்வீன் சுல்தானா அவர்கள்
திரு. மதுக்கூர் இராமலிங்கம் அவர்கள்
திரு. ராஜா அவர்கள்

Add a Comment