POST: 2025-02-09T09:58:44+05:30

சென்னைச் செந்தமிழ் மன்றம்

பொது அறக்கட்டளை (28/2024)

அனைத்திந்திய சாதனைப் புத்தகத்துடன் இணைந்து

நடத்திய

நாடோறும் நன்னூல் பன்னாட்டுக் கருத்தரங்கம்

உலக சாதனை படைத்து

நிறைவு விழா

நாள் : 09.02.2025 – ஞாயிற்றுக்கிழமை

நேரம் : காலை 10.00 மணி முதல் பிற்பகல் 01.00 மணி வரை

இடம் : அறிஞர் அண்ணா நூற்றாண்டு நூலகம்

நூல் வெளியீட்டு அரங்கம் (இரண்டாவது தளம்)

கோட்டூர்புரம், சென்னை.

சென்னைச் செந்தமிழ் மன்றம் – பொது அறக்கட்டளை இணையவழியில் 01.01.2024 முதல் 17.04.2024 வரை 108 நாட்கள் 108 பேராசிரியர்களைக் கொண்டு நாடோறும் நன்னூல் என்னும் பொருண்மையில் பன்னாட்டுக் கருத்தரங்கம் நடத்தி உலக சாதனை படைத்தது. இக்கருத்தரங்கில் பேராசிரியர்களும் ஆய்வாளர்களும் நன்னூல் இலக்கணத்தை நூற்பா வாரியாக விளக்கமாக ஆய்வுரைகளாகத் தந்தனர். இந்த ஆய்வுரைகள் 100 ஆய்வுக்கட்டுரைகளாகத் தொகுக்கப் பெற்று இரண்டு தொகுதிகளாகத் தற்பொழுது உருவாக்கப்பட்டுள்ளன. இவற்றை 09.02.2025ஆம் நாளன்று வெளியிடவும் தமிழ்ச்சான்றோர்களுக்கு விருது அளிக்கவும் உள்ளோம். எனவே இவ்விழாவில் தாங்கள் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கிறோம்.

அன்புடன்

முனைவர் ஆ. இரமேஷ்

இயக்குநர்
சென்னைச் செந்தமிழ் மன்றம் பொது அறக்கட்டளை அண்ணாநகர், சென்னை. பேச : 9788957689

நிகழ்ச்சி நிரல்

நாள் : 09.02.2025 – ஞாயிற்றுக்கிழமை

நேரம் : காலை 10.00 மணி முதல் பிற்பகல் 01.00 மணி வரை

வரவேற்புரை

முனைவர் ஜ. சிவகுமார்

உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை (சுழற்சி 2)
துவாரகதாஸ் கோவர்தன்தாஸ் வைணவக் கல்லூரி அரும்பாக்கம், சென்னை 600 106.

நன்னூல் பன்னாட்டுக் கருத்தரங்கக் கட்டுரைகள் இரண்டு தொகுதிகளையும் நன்னூல் இசைப்பேழையையும் வெளியிட்டுச் சான்றோர்களுக்கு விருது வழங்கிச் சிறப்புரையாற்றுபவர்

முனைவர் ஒளவை ந. அருள்

இயக்குநர் தமிழ் வளர்ச்சித்துறை, சென்னை, தமிழ்நாடு.

தம் வாழ்நாள் முழுமையும் மொழியியலில் அரும்பணியாற்றியமைக்காகப் பவணந்தி முனிவர் விருது

பெறுபவர்

முனைவர் பொன். கோதண்டராமன்

மேனாள் துணைவேந்தர் சென்னைப் பல்கலைக்கழகம் சென்னை – 600 005.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *