
ஆற்றல் திலகம்
பண்பின் பெட்டகம்
தமிழ், தமிழர்கள் தமிழ்ப்பண்பாடு, மொழிபெயர்ப்பு தொடர்பான பொருண்மைகளை அலைபேசியில் உடனே அழைத்துக் கேட்பதும் அதற்கேற்ற முடிவுகளை அவர் வழியிலேயே நிறைவேற்றிக் காட்டுவதும் தான் திரு ரமேஷ் அவர்களின் கூடுதல் சிறப்பு.
பல நேரங்களில் துணை இயக்குநர் என்றால் ஆங்கில மொழிபெயர்ப்பான Deputy என்று தான் அரசு அலுவலகங்களில் எண்ணுவார்கள்.
ஆனால் திரு ரமேஷ் இதற்கு ஒரு விதிவிலக்கு
தமிழில் எப்படி கடவுள் துணை என்று எழுதுவார்களோ அதுபோல அவர் பணியாற்றிய தமிழ்நாடு அரசின் அயலகத் தமிழர் நலன் துறையின் அலுவலகத்தில் அவர் உற்ற துணையாகவும் பேரறிவுப் பெருந்தகையாகவுமாக மிளிர்ந்தார்…
அண்மையில் கவிப்பேரரசு என்னிடம் வெளிநாட்டுத் தூதர் தமிழ்நாட்டில் யார் என்றால் தனக்கு
திரு ரமேஷ் என்று அவர் மகிழ்ச்சியாக சொல்லி அவரை தொலைபேசியில் அழைத்துப் பேசிய பொழுது பெருமிதம் அடைந்தேன்.
அவரின் மறைவு மீள முடியாத துயரம்
அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும்
அலுவல் பெருமக்களுக்கும்
என் ஆழ்ந்த இரங்கல்
Add a Comment