தமிழ் வளர்ச்சித் துறை
தமிழ் இலக்கிய மறுமலர்ச்சி நாள் விழா
அழைப்பிதழ்
நாள் : 19.02.2025 புதன்கிழமை
இடம் : மாநிலக் கல்லூரி. சென்னை
“உ.வே.சாமிநாதையர் பிறந்தநாள் (பிப்ரவரி 19) தமிழ் இலக்கிய மறுமலர்ச்சி நாளாகக் கொண்டாடப்படும்!”
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
பெருந்தகையீர், வணக்கம்.
திருவாரூர் மாவட்டத்தில் உத்தமதானபுரம் என்னும் சிற்றூரில் பிறந்து,
செழுந்தமிழ் உணர்வுகளாற் சிறந்து.
உவமையிலாக் கலைஞானம் உகந்து,
உணர்வரிய மெய்ஞ்ஞானம் பெற்றுத் திகழ்ந்து,
ஒப்பரிய தமிழ்ப் பணிகள் புரிந்து
ஓங்கு புகழ்பெற்ற உயர்தனிப் பெரும்புலவர் தமிழ்த்தாத்தா உவேசா அவர்களின் பிறந்தநாளை தமிழிலக்கிய மறுமலர்ச்சி நாள்’ என்று கொண்டாடி மகிழ ஆணையிட்டுள்ளார் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள்.
தமிழ் மொழியின் தொன்மையினை
ஆகச்சிறந்த சான்றுகளோடு நிறுவுவதற்கு அடித்தளமிட்ட ஆளுமையர் தமிழ்த்தாத்தா உ.வே.சா. அவர்கள்.
பன்னெடுங்காலமாய்.
தமிழ்த்தாய் நடந்த தகைசால் சுவடுகளைத் தாங்கிக் கிடந்த ஓலைச் சுவடிகளைத் தேடிப் பிடித்து, தெளிவுறப் படித்து,
நூலென வடித்து
நுண்மாண் நுழைபுலத்தோடு பதிப்பித்துக் கொடுத்து,
அன்னைத் தமிழுக்கு அறிவுலகம் வியக்கும் அணிகலன்கள் அனேகம் பூட்டி அழகு செய்த ‘பெரும்பேராசிரியர்’ அவர்.
அவர்தம் 171ஆம் பிறந்தநாளை, தமிழ்நாடு அரசின் ஆணைப்படி வண்ணமிகு விழாவாக வடிவமைத்து,
வளத்தக்க சிந்தனையாளர்களை வரவழைத்து,
நலத்தக்க மொழிமாலை கட்டி நாவாலும் பாவாலும் கொண்டாடி மகிழ்கிறது தமிழ் வளர்ச்சித் துறை.
தமிழரின் விழுமியங்களையும் பெருமிதங்களையும் தேடிக் கொணர்ந்து திரவியமாய் ஈந்த,
அருந்தமிழ் அறிஞர் முதுமுனைவர் தமிழ்த்தாத்தா உ.வே.சா அவர்களின் திருப்புகழ் கேட்டுத் தித்தித்து மகிழ, அனைவரையும் அன்புடன் அழைத்து மகிழ்கிறேன்.
ஒளவை அருள்
இயக்குநர்
தமிழ் வளர்ச்சித் துறை
நிகழ்ச்சி நிரல்
10.00 மு.ப. :
தமிழ்த்தாய் வாழ்த்து
வரவேற்புரை
நோக்க உரை
: ஔவை அருள்
இயக்குநர். தமிழ் வளர்ச்சித் துறை
முனைவர் இரா. இராமன்
இணை இயக்குநர் (நிதி) கல்லூரிக் கல்வி இயக்ககம் மற்றும் முதல்வர் (மு.கூ.பொ.). மாநிலக் கல்லூரி (தன்னாட்சி)
முன்னிலை உரை
திரு. வே. இராஜாராமன் இ.ஆ.ப., அரசு செயலாளர் தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித் துறை
விழாப் பேருரை
திரு. மு.பெ.சாமிநாதன் அவர்கள் மாண்புமிகு தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர்
10.45 11.00 மு.ப.
:
தேநீர் இடைவேளை
கருத்தரங்கம்
11.00 மு.ப – 01.00 பி.ப.
தலைமை :
முனைவர் கு.ஞானசம்பந்தன்
தமிழ் தந்த பெருமை
உ.வே.சாமிநாதரும் சுவடி தேடலும்
முனைவர் ப. சரவணன்
உ.வே.சாமிநாதரின் பதிப்புச் செம்மை
முனைவர் க.பலராமன்
உ.வே.சாமிநாதரின் சிந்தாமணிப் பதிப்பு முனைவர் மு.முத்துவேல்
உ.வே.சாமிநாதரும் மகாத்மா காந்தியும்
உ.வே.சாமிநாதரின் நன்றி மறவாப் பண்பு
திருமதி சித்ரா பாலசுப்பிரமணியன்
முனைவர் சீதாபதி ரகு
உ.வே.சாமிநாதரின் உரைநடைப் பங்களிப்பு
முனைவர் இரா. வெங்கடேசன்
01.00 2.00 பி.ப. :
உணவு இடைவேளை
பட்டிமன்றம்
02.00 பி.ப. – 04.00 பட்டிமன்றம்
02.00 பி.ப. – 04.00 பி.ப..
நடுவர்
திரு. தாமல் கோ. சரவணன்
தலைப்பு
தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிப் பங்களிப்பில் பெரிதும் விஞ்சி நிற்பது உ.வே. சாமிநாதரின் பழந்தமிழ்ப் பற்றே! நவீனப் பதிப்பு நெறிகளே!
பழந்தமிழ்ப் பற்றே!
நவீனப் பதிப்பு நெறிகளே!
செல்வன் நா. பூபாலக்கண்ணன் முனைவர் பட்ட ஆய்வாளர்
செல்வி ர. தமிழ் முனைவர் பட்ட ஆய்வாளர்
செல்வி அ. இராஜேஸ்வரி முதுகலை தமிழ் இலக்கியம்
செல்வி நொ. சுபலட்சுமி
இளங்கலை தமிழ் இலக்கியம்
செல்வன் மா. சரண்ராஜ் இளங்கலை தமிழ் இலக்கியம்
செல்வன் அ. முகிலன்
இளங்கலை தமிழ் இலக்கியம்
நன்றியுரை
: திருமதி கு.ப. சத்தியபிரியா
துணை இயக்குநர் (நி) தமிழ் வளர்ச்சித் துறை
நாட்டுப்பண்

Add a Comment