தமிழ் வளர்ச்சித்துறை உலக தாய்மொழி நாள் உவகை திருவிழா 2025
தமிழ் வளர்ச்சித் துறை
உலகத் தாய்மொழி நாள்
அழைப்பிதழ்
நாள் : 21.02.2025 வெள்ளிக்கிழமை
இடம் : இரத்தினம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி இரத்தினம் தொழில்நுட்ப வளாகம், ஈச்சனாரி, கோயம்புத்தூர்.
பெருந்தகையீர், வணக்கம்.
“கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே முன்தோன்றி” மூத்துச் சிறந்து பூத்துக் குலுங்கும் நம் புத்தமுதத் தேன்மொழியைப் போற்றிப் பரவிடும் வகையில்,
யுனெஸ்கோ நிறுவனத்தினால் 1999ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டவாறு,
ஆண்டுதோறும்
“உலகத் தாய்மொழி நாளை”
தமிழ் வளர்ச்சித் துறை பெருமிதமாகக் கொண்டாடி வருகிறது.
சிந்தை மணக்கும் இச்செந்தமிழ்ப் பெருவிழாவில்
என்றுமுள தென்றமிழின் இணையில்லாப் பெருமையினை
இளந்தலைமுறையினர் அறிந்து கொள்ளும் வகையில்
பன்னருங் கலைதெரி பட்டிமன்றமும்,
காவில் ஆடும் களிமயிலாய்ப் பாவில் ஆடும் பாட்டரங்கமும்.
புவியரங்கம் போற்றுகின்ற புகழ்மிக்க தாய்மொழியின் பெருமிதத்தை
செவியரங்கில் ஏற்றவரும் சிந்தனைச் செயல் பேராசிரியர்களின் கருத்தரங்கமும் நடைபெறவுள்ளன.
உள்ளொளி பெருக்கும் உலகத் தாய்மொழி நாள் உற்சாகத் திருவிழா சிறக்க
அனைவரும் வருகை புரியுமாறு கனிவன்புடன் வேண்டுகிறேன்.
ஔவை அருள்
இயக்குநர்
தமிழ் வளர்ச்சித் துறை
நிகழ்ச்சி நிரல்
ஒளிர் காலை 10.00 மணி
தமிழ்த்தாய் வாழ்த்து
வரவேற்புரை
ஒளவை அருள்
இயக்குநர். தமிழ் வளர்ச்சித் துறை
முன்னிலையுரை
திரு. வே.ராஜாராமன் இ.ஆ.ப..
அரசு செயலாளர்
தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை
சிறப்புரை
:
திரு. பவன்குமார் க. கிரியப்பனவர் இ.ஆ.ப..
மாவட்ட ஆட்சித்தலைவர் கோயம்புத்தூர்
முனைவர் சி. பாலசுப்ரமணியன் முதல்வர் இரத்தினம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி
திரு. மதன் செந்தில்
தாளாளர் இரத்தினம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி
2023ஆம் ஆண்டிற்கான உலகத் தமிழ்ச் சங்க இலக்கண. இலக்கிய. மொழியியல் விருதுகளை வழங்கி விழாப்பேருரை
திரு. மு.பெ. சாமிநாதன் அவர்கள் மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர்
வாழ்த்துரை
திரு. வி. செந்தில் பாலாஜி அவர்கள் மாண்புமிகு மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர்
திரு. க. ஈஸ்வரசாமி அவர்கள் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர்
திருமதி கா.ரங்கநாயகி ராமசந்திரன் அவர்கள்
மாண்புமிகு கோயம்புத்தூர் மாநகராட்சி மேயர்
திரு. செ. தாமோதரன் அவர்கள் கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினர்
திரு.ரா. வெற்றிசெல்வன் அவர்கள் கோயம்புத்தூர் மாநகராட்சி துணை மேயர்
மு.ப. 11.00 மணி
உலகத் தாய்மொழிநாள் உறுதிமொழி
படர்பகல் மணி 11.05 12.00 :
பாட்டரங்கம்
தலைமை
கவிச்சுடர் கவிதைப்பித்தன்
பாடுபொருள்
பாடும் கவிஞர்
தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
கவிஞர் கங்கை மணிமாறன்
தமிழ் எங்கள் இளமைக்குப் பால்
கவிஞர் ஆண்டாள் பிரியதர்சினி
தமிழ் எங்கள் புலவர்க்கு வேல்
கவிஞர் இரா.தனிக்கொடி
தமிழ் எங்கள் உயர்வுக்கு வான்
கவிஞர் வீ.ம.இளங்கோவன்
தமிழ் எங்கள் அசதிக்கு தேன்
கவிஞர் வல்லம் தாஜ்பால்
பிற்பகல் மணி 12.00-1.00
கருத்தரங்கம்
தலைமை
: புலவர் செந்தலை ந.கவுதமன்
‘தொன்மைத் தமிழும் தொடரும் தமிழும்’
தலைப்பு
கருத்துரையாற்றுவோர்
வாழ்வியல் தமிழ்
பேராசிரியர் இரா. சுப்பிரமணி
மொழியாக்கத் தமிழ்
இதழாளர் பா. மீனாட்சி சுந்தரம்
கல்வித் தமிழ்
பொறியாளர் சூ.ந. பன்னீர்செல்வம்
நடப்புத் தமிழ்
தாய்த்தமிழ் கு.ந. தங்கராசு
பிற்பகல் மணி 2.00-4.00 :
பட்டிமன்றம்
நடுவர்
: திரு. அ. முகமது ஜியாவுதீன்
மனிதவாழ்வின் வருங்காலத்தை வளமாக்குவது செயற்கை நுண்ணறிவா ? இயற்கை நுண்ணறிவா?
செயற்கை நுண்ணறிவே!
இயற்கை நுண்ணறிவே!
வழக்கறிஞர் விக்னேஷ் உதயன்
திரு. இல.சிவசக்திவடிவேல்
கவிஞர் அனுகிரகா ஆதிபகவன்
முனைவர் சிவ. சதீஷ்குமார்
நன்றியுரை
:
திருமதி தே. ஜெயஜோதி
துணை இயக்குநர்
தமிழ் வளர்ச்சித் துறை
நாட்டுப்பண்

Add a Comment