
தமிழ் வளர்ச்சித் துறையில் இயக்குநராகப்பணியில் சேர்ந்தவுடன் பல கோப்புகளை நுணுகிப் படிக்கும் வாய்ப்பு கிடைக்கப்பெற்றது.
அப்பொழுது ஒரு கோப்புக்கு முடிவு சொல்லும் பொழுது எந்நிலையிலும் ஓய்வு பெற இருக்கும் அலுவலர்களுக்கு நிலுவை ஏதுமின்றி குறைகள் நேராதபடி ஓய்வினை மகிழ்ச்சியாக துய்ப்பதற்கு ஏதுவாக கோப்புகளை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினேன். அவ்வகையில் நாளது வரை அதில் தொய்வில்லை.
ஆனால் விதிவிலக்காக ஒரு கோப்பு மட்டும் சில ஆண்டுகளாக முடிவு எட்டாமல் இருந்ததை உடனுக்குடன் அதற்குத் தீர்வுதந்து அந்த அலுவலருக்கு கடந்த மூன்று திங்களுக்கு மேல் ஓய்வூதியம் பெறுவதற்கு அனைத்து உதவிகளையும் செய்ததோடு அவர் எல்லையில்லாத மகிழ்ச்சியில் துள்ளி என்னை ஆரத்தழுவி நீண்ட நேரம் தான் கலந்து கொண்ட பல கூட்டங்களையும் அலுவலால் தான் செய்த சாதனைகளையும் சுட்டிக்காட்டினார்.
அப்பெருந்தகை 25.2.25 செவ்வாய்க்கிழமையன்று மதியம் மறைந்தார் என்ற செய்தி வந்ததும் துயரில் ஆழ்ந்தேன்.
அவரை நான் எப்பொழுதும் அண்ணா என்று சொல்லி தான் பேசுவேன்.
அவருக்கு ஓய்வூதியம் கிடைத்த பிறகு சிரித்துக் கொண்டே சொன்னேன் ஊருக்கே தெரிந்த வசனத்தை சொல்லுகிறேன் என்று வருத்தப்படாதீர்கள் குமார் என்றேன்.
இன்று எங்களை எல்லோரையும் வருத்தத்தில் ஆழ்த்திவிட்டு தமிழ் வளர்ச்சித் துறையின் ஓய்வு பெற்ற உதவி இயக்குநர் திரு. குமார் வானில் கலந்தார்.
அவர் குடும்பத்தாருக்கு ஆறுதல் எப்படி சொல்வேன்?
துயரத்துடன்
அருள்


Add a Comment