

தமிழ் வளர்ச்சித் துறை சார்பில்
இளையோர் இலக்கியப் பயிற்சிப் பாசறை 21.10.24 அன்று திருச்சிராப்பள்ளியில் உள்ள
ஸ்ரீமதி இந்திரா காந்தி கல்லூரியில், எழுச்சியோடு நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் த.மு.எ.க.ச வின் துணைத்தலைவரும் வங்கி அலுவலரான திரு நெடுஞ்செழியன் சிங்காரவேலு என்கிற கவிஞருமான நந்தலாலா அவர்கள் “சீரிளமைத்திறம் வியப்போம்”என்ற தலைப்பில் ஆற்றிய உரை அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியதோடு மட்டுமல்லாது, மாணவர்களிடையே புத்துணர்ச்சியை ஏற்படுத்தியது.
நிகழ்வு முடிந்ததும் கவிஞர் நந்தலாலா கல்லூரியின் முகப்பில் உள்ள அரச மரத்தடிக்கு என்னை தனியாக அழைத்துச் சென்றார்.
அம்மரத்திற்கு அடியில் அண்ணல் காந்தியின் சிலையினை சுட்டிக்காட்டி
, “1934 ஆம் ஆண்டு இக்கல்லூரிக்கு காந்தியடிகள் வந்தபோது, இம்மரத்திற்கு அடியில் அமர்ந்து தான் மாணவச் செல்வங்களோடு கலந்துரையாடினார். அதன் நினைவாகவே இச்சிலை இங்கு நிறுவப்பட்டுள்ளது”, என்ற வரலாற்று ஆதாரத்தோடு சொன்னது நீங்கா நினைவுகளாக உள்ளது.
இனிய சொற்பொழிவாளர், கவிஞர், நூலாசிரியர், வரலாற்று ஆய்வாளர் என பன்முகத்தன்மைக் கொண்ட வளமான சிந்தனையாளர் நந்தலாலா அவர்கள் 4.3.2025 அன்று வானில் கலந்தார் என்ற செய்திக் கேட்டு கலங்கினேன்.
நிலமிருக்கும் நாள் வரைக்கும்
நின் புகழ் இருக்கும்.
துயரத்துடன்
அருள்
Add a Comment