
பெண்ணின் பெருமை பேசிமுடியாது !
பெருமையால் உலகை மகிழ்வாக்கிய பெண்மணிகளே !
உலகை உருவாக்கிய பொன்மணிகளே !
எத்தனைக் கோலங்கள் !
மகளாய், மனைவியாய், தாயாய், மாமியாய், பாட்டியாய் மனங்கவரும் தெய்வமாய்
அத்தனை நிலைகளிலும்
எங்கள் நெஞ்சைக் கரைத்த
தாரகை நீங்கள்
அழுதபோது ஆறுதல் சொல்வீர்கள்.
தொழுதபடியே எத்தனைப் பணிகளை
துறைதோறும் அழகு செய்தீர்கள்
மாதர்களே நீங்கள் மாணிக்கங்கள்
கும்பிட்டுப் புகழ்வதைத் தவிர
என்ன செய்ய முடியும்.
நாங்கள் கூழாங்கற்கள்
நீங்களோ
வைரக் கற்கள், வான நிலாக்கள், வற்றாத அருவிகள்
மகளிர் பெருமையை எழுத
என் விரல்கள் தேயும்.
வானத்தை ஏடாக்கி
வையத்தின் மரங்களை எழுதுகோலாக்கி
ஆர்ப்பரிக்கும் கடலை மையாக்கி
பெண்களின் பெருமையை எழுதமுடியாமல்
விழிகள் வியந்தபடியே வழியும் நீர்த்துளிகள்
வாழ்க தாய்க்குலம் ! வளர்க தையல் உலகம்
Add a Comment