உலகத் தமிழ்ச் சங்கம், மதுரை
உலகத் தமிழ்ச் சங்க நிறுவனர் முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சர் டாக்டர் எம்.ஜி.இராமச்சந்திரன் அவர்களின் 108ஆவது பிறந்தநாளைக் கொண்டாடும் வகையில்
நிறுவனர் நாள் விழா
அழைப்பிதழ்
08.03.2025 முற்பகல் 09.30 மணி உலகத் தமிழ்ச் சங்கக் கூட்ட அரங்கம், மதுரை
தொடக்க விழா
வரவேற்புரை
: முனைவர் ஜ.ஜான்சிராணி அவர்கள் ஆய்வு வளமையர். உலகத் தமிழ்ச் சங்கம், மதுரை
தலைமையுரை :
முனைவர் ஒளவை ந.அருள் அவர்கள் இயக்குநர் (மு.கூ.பொ). உலகத் தமிழ்ச் சங்கம், மதுரை
சிறப்புரை :
முனைவர் மேகலா சித்ரவேல் அவர்கள் எழுத்தாளர், சென்னை
நூல் கருத்துரை :
திரு. பிச்சாண்டி இ.ஆ.ப. அவர்களின் ‘எனக்குள் மணக்கும் எம்.ஜி.ஆர். நினைவுகள்’ முனைவர் வீ.ஜெயப்பிரகாஷ் அவர்கள் திரைப்பட இயக்குநர். சென்னை
: ஒளவை நடராசன் அவர்களின் ‘மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மணிமகுடம்’ திருமதி சங்கரேஸ்வரி ஆறுமுகம் அவர்கள் இலக்கியப் பேச்சாளர். சங்கரன் கோவில்
மாபெரும் இசைப் பேருரை
திரைப்பாடல்களால் விழிப்பூட்டிய பெருங்கலைஞர் எம்.ஜி.ஆர்!
வழங்குபவர் திரு. சோழ.நாகராஜன்
உடன்…
திரு. கணேசன் – தபேலா
திரு. சரவணன் – குரல்
திரு. சேவியர் – ரிதம் பேடு
திரு. பாலாஜி -கீ போர்டு
பன்னாட்டுக் கருத்தரங்கம்
பிற்பகல் 2.00 – 3.00
முதல் அமர்வு
தலைமை
கற்பித்தலில் நகைச்சுவை
தகைசால் பேராசிரியர் வீ.ரேணுகாதேவி மதுரை
கட்டுரையாளர்கள்
பாரம்பரியத்தின் எதிரொலிகள்: கொரிய மற்றும் தென்னிந்திய அருவமான கலாச்சார மரபுகளின் ஒப்பீட்டு ஆய்வு
முனைவர் மெய்.சித்ரா ஹாங்காங்
தேவாரப் பாவியலில் ஆசிரியச் சந்த விருத்தங்கள்
முனைவர் அ.மோகனா மதுரை
நற்றிணை காட்டும் நீர்வாழ் உயிரினங்கள் திருமதி இரா.சுகுணாதேவி திருப்பூர்
புரட்சித்தலைவர் புகழ் அந்தாதி ஒரு பார்வை
முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லசஷ்மி சிங்கப்பூர்
இணை அமர்வு
தலைமை
மலேசியத் தமிழ்ச் சிறுகதைகளில் மொழி
முனைவர் க.பசும்பொன் மதுரை
கட்டுரையாளர்கள்
எம்.ஜி.ஆர் ஆற்றிய தமிழ்த் தொண்டு
திரு. அ.இருளப்பன் மதுரை
தமிழ் இலக்கிய மேன்மை -அன்றும் இன்றும்
முனைவர் ஆ. மகேசு ஓசூர்
சங்க இலக்கியத் தரவுகளும் அகழாய்வுக் கண்டுபிடிப்புகளும்
முனைவர் ப.ராஜசேகர் சென்னை
எஸ்.ராமகிருஷ்ணன் ‘நிமித்தம்’ நாவலில் மொழிநடை
திருமதி ரா.சத்தியசீலா மதுரை
பிற்பகல் 3.00 – 4.00
இரண்டாம் அமர்வு
தலைமை
தீபம் நா.பார்த்தசாரதியின் கட்டுரைகள் – புலமையும் புதுமையும்
முனைவர் சு.தங்கமாரி விருதுநகர்
கட்டுரையாளர்கள்
தாமரை செந்தூர் பாண்டியின் ‘தகனம்’ என்னும் சிறுகதையில் சாதியம் முனைவர் அ.பார்த்திபன் விருதுநகர்
தமிழ் இலக்கணங்களில் சொல் வகைப்பாடும் மொழியியல் நோக்கும்
முனைவர் சி.கோ.ஷங்கர் மதுரை
மதுரைக்காஞ்சியில் தொழிலும் தொழில்நுட்பமும்
செல்வி ம.கங்கா மதுரை
நற்றிணை குறிஞ்சித் திணையில் நீர்வளம்
செல்வி ம.ரஞ்சிதா மதுரை
‘சேற்றில் மலர்ந்த செந்தாமரை’ சிறுகதைத் தொகுப்பில் காணலாகும் சமுதாயச் சிந்தனைகள்
செல்வி நாச்சம்மாமீனா மதுரை
தலைமை
இணை அமர்வு
தமிழ் ஒளியின் ‘வீராயி’ காப்பியத்தில் விளிம்புநிலை மாந்தர்
முனைவர் யாழ் சு.சந்திரா மதுரை
கட்டுரையாளர்கள்
கூவநூலும் தமிழரின் நீரியல் அறிவும்
முனைவர் சே.முனியசாமி மதுரை
தமிழர் பண்பாட்டு விழாக்களில் ஏறுதழுவுதல் திரு. ச.காளிராஜ் (எ) சிவசக்திவேல் மதுரை
தொ.மு.சி.யின் இலக்கிய விமர்சனம் கூறும் சிக்கல்களும் தீர்வுகளும்
செல்வி பா.நந்தினி மதுரை
தொ.மு.சி யின் ஆய்வு நெறிமுறைகள் செல்வி க.அமுதமீனா மதுரை
முக்குறுணி விநாயகரும் முக்கியத் தகவல்களும் திரு. த.வினோத் மதுரை
பிற்பகல் 4.00 – 5.00
மூன்றாம் அமர்வு
தலைமை
ஆறுமுகனின் அருந்தமிழ் காதல் முனைவர் ப.கணேஷ் வடிவேல் திருச்சி
கட்டுரையாளர்கள்
முத்தமிழின் பாடல் திரு. த.இராம்குமார் கோவில்பட்டி
சங்க இலக்கியங்களில் தோழி திருமதி சௌ.சுகுமாரி மதுரை
குறுந்தொகை காட்டும் இல்லறம் திரு. பா.சுரேஷ் மதுரை
கலித்தொகை உணர்த்தும் அறநெறி திருமதி வி.மோனிகா யாழினி மதுரை
இக்கால இலக்கியங்களில் கற்பனை செல்வி சோ. ஸ்ரீமதி இராமநாதபுரம்
தலைமை
திருக்குறளின் பாட வேறுபாடும் யாப்பும் முதுமுனைவர் ப.திருஞானசம்பந்தம் மதுரை
இணை அமர்வு
கட்டுரையாளர்கள்
தொல்காப்பியம் மற்றும் நன்னூல் நூற்பாக்களின் வழி தனித்தமிழைக் கட்டமைத்தல்
திருமதி தனலட்சுமி சீனியப்பன் இராஜபாளையம்
பரிபாடலும் முருகன் குறித்த தொன்மமும் முனைவர் ரா.நாகேந்திரன் அருப்புக்கோட்டை
ஐங்குறுநூற்று முல்லைத் திணையில் மழை செல்வி ஆ.பாண்டிச்செல்வி மதுரை
பெரியபுராணத்தில் தொல் இசைக்கருவிகளும் பதிவுகளும் செல்வன் ச.வாசுதேவன் தஞ்சாவூர்
தொல்காப்பிய மெய்ப்பாடுகளும் ஐங்குறுநூறும் செல்வன் கி.மலைச்சாமி தஞ்சாவூர்
“திரைப்படப் பாடல்களின் வழி வாழ்வியல் நெறிகளைப் புகுத்தியவர் எம்.ஜி.ஆர்; கவியரசு கண்ணதாசன் அவர்களை அரசவைக் கவிஞராக்கியவர் புரட்சித்தலைவர்
மதுரை மதுரை, உலகத் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் 08 03 2025 அன்று முற்பகல் 10.00 மணிக்கு ‘நிறுவனர் நாள் விழா நிகழ்வு உலகத் தமிழ்ச் சங்கப் பெருந்திட்ட வளாகக் கூட்ட அரங்கில் நடைபெற்றது. உலகத் தமிழ்ச் சங்கத்தின் ஆய்வறிஞர் முனைவர் சு.சோமசுந்தரி நிகழ்வினை ஒருங்கிணைத்தார்.
இந்நிகழ்விற்கு உலகத் தமிழ்ச் சங்க இயக்குநர் முனைவர் ஔவை த அருள் அவர்கள் தலைமையுரை ஆற்றினார். அவர்தம் உரையில், “திரைப்படப் பாடல்களின் வழி வாழ்வியல் நெறிகளைப் புகுத்தியவர் எம்.ஜி.ஆர். கவியரசு கண்ணதாசன் அவர்களை அரசவைக் கவிஞராக்கியவர் புரட்சித்தலைவர் 5ஆம் உலகத் தமிழ் மாநாட்டில் உலகத் தமிழ்ச் சங்கம் அமைக்கப்படும் என அறிவித்ததால் மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தில் ஆண்டுதோறும் நிறுவனர் நாள் கொண்டாடப்படுகிறது. உங்களில் ஒருவன் என்ற தன்வரலாறு நூலில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் புரட்சித்தலைவர் குறித்து பெருமிதமாக குறிப்புகளை எழுதியுள்ளார்” என்று குறிப்பிட்டார்.
சென்னைவாழ் எழுத்தாளர் முனைவர் மேகலாசித்ரவேல் அவர்கள் சிறப்புரை வழங்கினார் அவர்தம் உரையில், “எம்.ஜி.ஆர் அவர்கள் இலங்கையில் பேசும்போது எனது தாய்மொழி மலையாளம் நான் பிறந்தது இலங்கை. நான் இருப்பது தமிழ்நாடு நான் யாருக்குச் சொந்தம் என்று கேட்டபோது ஒரு சிறுவன் நீங்கள் எங்கள் வீட்டுப் பிள்ளை என்றானாம் இவ்வாறு எல்லோராலும் விரும்பப்பட்ட தலைவர் எம்.ஜி.ஆர்’ என்று குறிப்பிட்டார்
சென்னைவாழ் திரைப்பட இயக்குனர் முனைவர் வீ ஜெயப்பிரகாஷ் அவர்கள் திரு பிச்சாண்டி இஆப அவர்களின் எனக்குள் மணக்கும் எம் ஜி.ஆர் நினைவுகள் என்ற நூலிற்குக் கருத்துரை வழங்கிச் சிறப்பித்தார் அவர்தம் உரையில் ‘எட்டாவது வள்ளல் எம் ஜி ஆர் குறித்துப் பேசுவதில் மகிழ்கிறேன் தனக்கு எதிரானவர்களையும் மதிக்கக்கூடியவர் எம் ஜி ஆர் அவர்கள் அதற்கு நடிகை பானுமதிக்கு அவர் அளித்த மதிப்பால் அறியலாம். இந்த நூலில் எம்.ஜி.ஆர் பற்றிய மிகச்சரியான பார்வை உள்ளது. நாம் உயர்ந்து ஓரிடத்திற்கு வந்தால் நம்மைச்சுற்றி உள்ளவர்களை உயர்த்தவே வந்திருக்கிறோம் என்று கூறியவர் புரட்சித்தலைவர் அவர்கள் பெண்களின் மனதைப் புரிந்து வைத்திருக்கிற பேராசான் என்று குறிப்பிட்டார்.
திரு ஔவை நடராசன் அவர்களின் மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மணிமகுடம் என்ற நூலிற்கு இலக்கியப் பேச்சாளர் திருமதி சங்கரேஸ்வரி ஆறுமுகம் அவர்கள் நூல் கருத்துரை வழங்கிச் சிறப்பித்தார். அவர்தம் உரையில் “திரு வலம்புரி ஜான் அவர்கள் எம்.ஜி ஆர் பற்றி சினிமாவில் அவர் ஒரு சகாப்தம், அரசியலில் அவர் ஒரு சரித்திரம் என்பார் ஒரு தலைவனின் நடத்தை எப்படி இருக்கவேண்டு என்பதை அறிந்தவர் எம்.ஜி.ஆர் ஒரு தலைவனுக்கு என்னென்ன பழக்கங்கள் இருக்கக் கூடாது என்பதற்கு இலக்கணம் எம்.ஜி ஆர் கார் ஓட்டி என்பதை காரோட்டி என மாற்றியவர் ஒளவை நடராஜன் அவர்கள் இந்த நூலில் ஓரிடத்தில் கூட எம்.ஜி.ஆருடன் இருந்ததாக வீண் புகழாரம் இல்லாமல் எழுதியுள்ளார் தனித்தமிழில் பேச வேண்டும் எழுத வேண்டும் என்பதைப் பின்பற்றியவர் ஔவை நடராஜன் அவர்கள் இந்நூலில் எம்.ஜி ஆர அவர்களின் இயல்பு, தனித்தன்மையை மிக அருமையாகப் பதிவு செய்துள்ளார்” என்று குறிப்பிட்டார்.
முன்னதாக உலகத் தமிழ்ச் சங்கத்தின் வளாகத்தில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலைக்கு தமிழறிஞர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் இந்நிகழ்வின் முதலாவதாக பன்னாட்டுக் கருத்தரங்கம் நடைபெற்றது. இக்கருத்தரங்கில் நடந்த மூன்று அமர்வுகளில் 32 கட்டுரையாளர்கள் பங்கேற்று கட்டுரை வாசித்தளித்தனர். ‘திரைப்பாடல்களால் விழிப்பூட்டிய பெருங்கலைஞர் எம்.ஜி.ஆர்’ என்னும் தலைப்பிலான மாபெரும் இசைப்பேருரை நடைபெற்றது திரு சோழ நாகராஜன் குழவினர் இப்பேருரையை நிகழ்த்தினர்.
இந்நிகழ்விற்குத் தமிழறிஞர்கள் மற்றும் பேராசிரியர்கள், கல்லூரி மாணவர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்

Add a Comment