
திரு. இரா. நாறும்பூ நாதன் தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலையில்
சு. இராமகிருஷ்ணன் சண்முகத்தம்மாள் இணையரின் மகனாக 27.12.1959 இல் பிறந்தவர்.
கணிதத்தில் முதுகலைப்பட்டம் பெற்றவர்.
திரு. இரா. நாறும்பூநாதன் ஸ்டேட்பேங்க் ஆப் இந்தியாவில் முப்பத்து மூன்று ஆண்டுகள் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்ற பின்னர் இலக்கியத்துறையில் ஈடுபட்டு முழு நேரத் தமிழ்த் தொண்டராகத் திகழ்பவர்.
மாவட்டக் கலைமன்றத்தின் உதவிச் செயலாளராகவும்,
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநிலத் துணைச் செயலாளராகவும் திகழ்ந்தவர்.
நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக இலக்கியக் கூட்டங்கள் பலவற்றை நடத்தி வருபவர்.
சிறுகதைகளை எழுதத்தொடங்கிய இவர்,
‘எண்ணங்கள்’, ‘த்வனி’ போன்ற இதழ்களை நடத்தினார்.
நண்பர்களுடன் இணைந்து ‘தர்சனா’ என்ற நாடகக் குழுவை உருவாக்கியது மட்டுமன்றி, ‘ஸ்ருஷ்டி’ என்னும் நாடகக் குழுவுடன் இணைந்து தமிழ்நாடு முழுவதும் சென்று நூற்றுக்கும் மேறப்ட்ட நாடகங்களை நடத்திய பெருமையும் இவருக்கு உண்டு.
2011 இல் ‘நாறும்பூ’ என்னும் வலைத்தளத்தைத் தொடங்கினார்.
இவருடைய முதல் நூலான
‘கனவில் உதிர்ந்த பூ’ பாளையங்கோட்டை சதக்கத்துல்லாஹ் அப்பா தன்னாட்சிக் கல்லூரியில் இளங்கலை மாணவர்களுக்கு பாடமாக வைக்கப்பட்டது.
‘கண்முன்னே விரியும் கடல்’, ‘
யானை சொப்பணம்’, ‘
ஜமீலாவை எனக்கு அறிமுகப்படுத்தியவன்’,
‘இலை உதிர்வதைப்போல’
எனச் சிறுகதை நூல்களையும்,
‘தட்டச்சு கால கனவுகள்’
‘திருநெல்வேலி – நீர் நிலம் மனிதர்கள்’,
வேணுவன மனிதர்கள்’,
‘கி.ரா. கடைசி நேர்காணல்’, ‘பால்வண்ணம்’ எனும் புதினங்கள் உள்ளிட்ட பதினைந்துக்கும் மேற்பட்ட நூல்களைப் படைத்தவர்.
திரு. இரா. நாறும்பூநாதன் அவர்களின் இலக்கியப் பணிகளையும், நாடகப்பணிகளையும் வலைத்தளப் பணிகளையும் பாராட்டும் வகையில் இவருக்குத் தமிழ்நாடு அரசு 2022 ஆம் ஆண்டின் உ.வே.சா. விருது வழங்கி, விருதுத்தொகையாக ரூ.2 இலட்சத்திற்கான காசோலை தகுதி உரையினை மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் அவர்கள் 22.2.2024 வழங்கி மகிழ்ந்த தருணம்….
16.3.25 மறைந்து விட்டார் என்ற செய்தி அறிந்ததும் வருத்தத்தில் வாடினேன்.
அவர் குடும்பத்தாருக்கும் நண்பர்களுக்கும் இலக்கிய ஆர்வலர்களுக்கும் என்ன ஆறுதல் சொல்வோம்?
Add a Comment