




ஓங்கிய புகழோடு மிளிரும் அறிஞர் இந்திய நாட்டின் மேனாள் ஒன்றிய அமைச்சரும் ஐநா அவையின் துணைத்தலைவராகப் பணியாற்றிய பீடும் பெருமையும் வாய்ந்தவரும் புதிய ஆங்கில வார்த்தைகளை புனையும் சிற்பியான அண்ணல் சசிதாரூர் அவர்களை 27.1.25 திங்கள் கிழமையன்று புகழ்வாய்ந்த தினமணி ஆசிரியர் தமிழ் உலகம் போற்றும் கலா ரசிகன்
திரு வைத்தியநாதன் அவர்கள் வாயிலாக கிண்டியில் உள்ள ஐடிசி சோழா ஷெரட்டன் ஐமீன் விருந்தக வளாகத்தில் அறிமுகம் செய்யப் பெற்றேன். அவ்வண்ணமே இந்திய உச்ச நீதிமன்றத்தின் மேனாள் நீதியரசரும்
தலைசிறந்த பேச்சாளர்
பெருந்தகை இராமசுப்பிரமணியன் அவர்களையும் சந்தித்து மகிழ்ந்தேன்.
Add a Comment