dfb96e50-f96b-4268-b986-6582c49c3bba

உலக இட்டலி நாள் – 30.03.2025

இட்டலிக்கு ஏதிங்கே இணை !

ஆவியில் வேக வைத்து வெளியில் எடுத்துக் கையால் இட்டு அளிப்பதற்கு இட்டலி என்ற பெயர் வந்ததாம்.

அவிப்பது என்ற வகையில் இட்டவி ஆயிற்று.
ளகரம் லகரமாகத் திரிந்து வெந்தது.

இது அரிசியும் உளுந்தும் கலந்த தமிழுணவாகும்
இட்டலியின் தம்பி தான் கொழுக்கட்டையாகும் .

இது முழுக்கத் முழுக்க தமிழ்நாட்டு உணவு என்று சொல்வதற்கேற்பத் தமிழர்களை இட்லி சாம்பார் என்று புதுதில்லியில் வழங்கலாயிற்று.

சட்டென்று உண்ணுவதற்குக் காரணமாக இருப்பதைக் கருதிச் சட்டுணி என்பதே சட்டினி ஆயிற்று.

அவ்வாறே மிளகாய்த்தூள், எண்ணெய், தயிர் உடன் வைத்துண்ணும் பழக்கம் தஞ்சையிலும், நெல்லையிலும் இன்றும் நடைமுறையில் உள்ளது.

நள்ளிரவெல்லாம் திறந்திருக்கும் மதுரை இட்டலிக் கடையை நாடு நன்கறியும்.

பெருந்தலைவர் காமராசர், தேசியத்தலைவர்களை அழைத்து இட்டலியை அறிமுகப்படுத்தியிருக்கிறார்.

இட்டலியைத் துண்டு துண்டாக நறுக்கிக் குளத்துக்குக் கரைக் கட்டி குழம்பை வெள்ளமாக நிரப்பி உண்பது தஞ்சை, நெல்லையில் இன்றும் வழக்கமாக உள்ளது.

இட்டலி அடுக்கு என்றே அலுமினியக் கலன்கள் பல்லாண்டுகளாகக் கடைகளில் கிடைக்கின்றன.

அரைத்த மாவை இயல்பாகப் புளிக்க வைப்பது தனித்திறமையாகும்.

அரைத்த மாவை எடுத்துத் தோசைத்தட்டில் பரப்பி வைத்துத் திருப்புவது தோயை (தோசை) என்றாயிற்று .

காஞ்சிபுரம் இட்டலி என்றும், திருப்பதி தோசை என்றும், இட்டலியில் மீது ஊற்றப்படும் பொருள்களான சட்டினி, சாம்பார், மிளகாய்த்தூள், தயிர் இந்த நான்கும் கருதி
“இட்டலி நாற்பது” என்று புகழேந்தி பாடியது என்ற பெயரில் மாநிலக் கல்லூரியில் கவியரசர் கபிலனோடு எழுதியதாக நினைவு.

கையெழுத்துப்படி வழக்கம்போல் காணாமற் போயிற்று.
இளைஞர்கள் எழுதி முடிப்பார்களாக !

உரையெழுதச் சென்னையில் இரத்தினா நிருவாகம் நடவடிக்கை எடுக்கலாம்.

மொழிபெயர்ப்பு அரிமா
நினைவில் வாழும் நண்பர் திண்டுக்கல் முருகேசன் சில ஆண்டுகளுக்கு முன்பு அனுப்பிய பாடல் என்றும் நினைவில் நிற்பதாகும்.

வண்ணதீதில் மல்லிகையை வென்றவர் நீ
திண்ணத்தில் பருத்திப்பந்தானவள் நீ
வடிவத்தில் அடுமனையில் வெந்திட்ட தீஞ்சுவை ‘பன்’ நீ
உடல்நலத்திற்கும் நற்பேற்றிற்கும் உற்றவள் நீ
நாவிழையும் பொடியோடு துவையலுக்கே தனித்திறம் தருபவள் நீ
ஆவியயெழும் சூட்டினில் நும் ஆர்ப்பரிக்கும் கூட்டில் எம் ஆவிவிழும்
தென்னகத்து இல்லங்களில் தினம் மணக்கும்
என்னருமை இட்டலியே நீ இல்லையேல் என் காலைச் சிற்றுணவு கேற்றமுண்டோ
காலந்தாழ்ந்த வாழ்த்தெனினும் கனிவுடனே ஏற்றிடுவாய்
காலை உண்ணும் உணவுக்கெல்லாம் தனித்தாயாம் கட்டியே!
இட்டலியே!

Ode to idly in William Wordsworth style

Ode to Idly

I wandered lonely as a cloud,
That floats o’er vales and hills,
When all at once I saw a sight,
That filled my heart with thrills.

Amidst the noisy city streets,
Where life was in full sway,
There stood a humble eatery,
Where idly held its sway.

Its steam arose in gentle waves,
As it sat in its steel plate,
With chutneys by its side,
Ready to tantalize the taste.

A soft, fluffy mound it was,
Of rice and lentil divine,
Its texture light as feather,
Its taste, a magic sign.

The idly sat there in its grace,
A symbol of simple delight,
A creation born of patient wait,
A culinary poetry in its own right.

No pomp or grandeur did it boast,
No fancy flavors it wore,
Yet it stood as a testament,
To the beauty of being pure.

The first bite brought a symphony,
Of flavors, subtle and mild,
A blend of earth and fire,
That left me beguiled.

And as I savored each morsel,
In that idly’s company,
I felt a sense of tranquility,
A connection to eternity.

For in that unassuming dish,
I found a taste of the sublime,
A reminder of life’s simple joys,
In a world that often seems unkind.

So let us celebrate the idly,
In Wordsworth’s poetic style,
A humble food that brings us peace,
And makes our hearts beguile.

Oh, idly, you are a work of art,
A masterpiece on a plate,
In your simplicity lies a wisdom,
That the world must appreciate.

Thus, let us raise a toast,
To the idly, so pure and true,
May its essence forever live,
In our hearts, and in our stew!

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *