POST: 2025-04-19T10:58:30+05:30

குமுதம்

19.02.2025

பக்கம் எண் : 60

பு(து)த்தகம்

ஒளவையின் தமிழமுது

ஔவை அருள்

குமுதம்

19.02.2025

பக்கம் எண் : 60

ஒளவையின் தமிழமுது
ஔவை அருள்

தமிழறிஞர், பத்மஸ்ரீ ஔவை நடராசன் பல்வேறு நூல்களுக்கு எழுதிய முன்னுரைகளை, அவரது மகன் ஒளவை அருள் அழகுறத் தொகுத்துள்ளார்.

தெளிந்த உணர்வோடு, திறமையொளி வீசும் வித்தகர்களைக் கண்டு வியந்து பாராட்டும் மனம் ஒளவை நடராசன் அவர்களுக்கு இருந்துள்ளதை இந்த 125 முன்னுரைகள் விளக்குகின்றன.

இந்நூலில் அடங்கி உள்ள 125 முன்னுரைகளும்
காலப்பெட்டகமாகவும், கருத்துமணிகளின் திரட்டாகவுமே திகழ்கின்றன.

நூலை வாசித்து முடிக்கும் போது, மிகப்பெரிய நூலகத்தில் நுழைந்து,
பல மணிநேரம் செலவு செய்து, பலவிதமான நுல்களில் இருந்து சிந்தனைகளை சேகரித்த உணர்வு ஏற்படுகிறது.

வைரமுத்து இணையர் வாழிய இனிதே எனும் முன்னுரையில் ‘
எந்த நிலையில் உள்ளவரையும், எந்தப்பருவத்தினரையும்,
எத்தகைய துறையினரையும் ஈர்க்கின்ற செம்மார்ந்த சொல்லோவியங்கள்… வைரமுத்து கவிதைகள்’ என மனந்திறந்து பாராட்டுகிறார்.

வெளியீடு : ஸ்ரீராம் பாரதி கலை
இலக்கியக் கழகம், 12/6, போயஸ் சாலை, தேனாம்பேட்டை, சென்னை-18.
பக்கம் 390. :
விலை ரூபாய் 500

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *