எங்கும் தமிழ்
எதிலும் தமிழ்
தமிழ்நாடு அரசு
தமிழ் வளர்ச்சித் துறை
தமிழ் வார விழா
பாவேந்தர் பாரதிதாசன்
135 ஆவது பிறந்தநாள் விழா
அழைப்பிதழ்
நாள்: 02.05.2025 – வெள்ளிக்கிழமை
இடம்:
பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சிராப்பள்ளி.
பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த நாள்
தமிழ் வார விழா
இனிய சான்றீர்,
வணக்கம்.
குயில் போலும் பாட்டுத் தமிழ் வளர்த்த பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த நன்னாளைப் புலவர் போற்றும் பொன்னாளாகவும் ஏழுநாள் தொடர்விழா நிகழும் தமிழ் வாரம் எனக் கொண்டாடுமாறு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் இவ்வாண்டு ஆணையிட்டுள்ளார்கள்.
தீச்சுடர் தெறிக்கும் பாச்சுடர் கொண்டு பகுத்தறிவு வெளிச்சம் பரப்பிய பைந்தமிழ் ஞாயிறு நம் பாவேந்தர்க்கு மலைக்கோட்டை மாநகராம் திருச்சியில் நிகழ்கிறது.
தமிழ் எங்கள் இளமைக்குப் பால் இன்பத்தமிழ் நல்ல புகழ்மிக்க புலவர்க்கு வேல்!
என்று தண்டமிழ் காக்கத் தமிழையே படையாக ஏந்திய தனிப்பெருங் கவிஞரை ஏந்திப் போற்றி எழில் செய்வதற்கும், கவிதை என்னும் தொழில் செய்வதற்கும், ஏற்றமிகு அறிஞர் பலர் கவிஞர் பலர் வருகை தரவுள்ளார்கள்.
இயற்றமிழ் அரங்கம், இசைதேன் அரங்கம், என்று செவிகளில் குவியும் செம்மதிச் செல்வத்தைப் பெற்றுச் சிந்தை குளிர்வதற்கு, ஆராத் தமிழ்க் காதல் கொண்ட அனைவரையும் அன்புடன் அழைத்து மகிழ்கின்றேன்.
ஒளவை அருள்
இயக்குநர் தமிழ் வளர்ச்சித் துறை
நிகழ்ச்சி நிரல்
காலை 10.00 மணி
தமிழ்த்தாய் வாழ்த்து
வரவேற்புரை
பேரா.முனைவர். இர.காளிதாசன்
பதிவாளர் (பொ),
பாரதிதாசன் பல்கலைக்கழகம்
தலைமை
பேரா.முனைவர்.வேலு இராஜேஷ் கண்ணன்
உறுப்பினர்-துணைவேந்தர் குழு.
பாரதிதாசன் பல்கலைக்கழகம்
நோக்கவுரை
ஔவை அருள்
இயக்குநர், தமிழ் வளர்ச்சித் துறை
முன்னிலையுரை
திரு. மா. பிரதீப் குமார், இ.ஆ.ப.
மாவட்ட ஆட்சித்தலைவர்
திருச்சிராப்பள்ளி
படர்பகல் 11.00-12.00
பாட்டரங்கம்
பொருண்மை
: பாவேந்தர் வரிகளில் தெறிக்கும்
பொறிகள்!
தலைமை
:
கவிதாயிணி ஆண்டாள் பிரியதர்ஷினி
இருட்டறையில் உள்ளதடா உலகம் :
கவிஞர் கோ.கலியமூர்த்தி
தாய் தடுத்தாலும் விடேன்:
பேராசிரியர் உ.அலிபாவா
மனிதரில் நீயுமோர் மனிதன் :
கவிஞர் தரன்
எல்லார்க்கும் உடைமை எல்லாம்
:கவிஞர் விவேக்பாரதி
படர்பகல் 12.00-1.00
கருத்தரங்கம்
தலைமை : மருத்துவர் இரா.கலைக்கோவன்
பொருண்மை
பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்
தமிழியல் புலத்தில். : முனைவர் இரா.குணசேகரன்
கருத்து வளத்தில். : முனைவர் விஜயகிருஷ்ணன்
கற்பனை நலத்தில்.. : பேராசிரியர் விஜயசுந்தரி
புதுமைத் தளத்தில்.
: திரு.பா. எழில் செல்வன்
பிற்பகல் 200-4.00
கலைமாமணி திருமதி பாரதி திருமகன் குழுவினரின் முத்தமிழ் வில்லிசையில் பாவேந்தர் பாரதிதாசன்
நன்றியுரை
திருமதி க.சித்ரா
துணை இயக்குநர். தமிழ் வளர்ச்சித் துறை, திருச்சிராப்பள்ளி மாவட்டம்
நாட்டுப்பண்
கடல்போலும் எழுக!
கடல் முழக்கம்போல் கழறிடுக – தமிழ்வாழ்க என்று!
பாவேந்தர் பாரதிதாசன்

Add a Comment