செம்மொழி நாள் பள்ளிப் போட்டிகள்
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்த நாளான ஜூன் 3 ஆம் நாளை, செம்மொழி நாளாக தமிழ்நாடு அரசு சீரும் சிறப்புமாகக் கொண்டாடும்” என்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிவித்துள்ளார்கள்.
இதனை முன்னிட்டு, தமிழ் வளர்ச்சித் துறை சார்பில், செம்மொழி நாள் தொடர்பான பேச்சு மற்றும் கட்டுரைப் போட்டிகள், மேனிலை வகுப்பில் பயிலும் பள்ளி மாணவர்களுக்காக (11, 12 ஆம் வகுப்பில் பயில்வோர்) இன்று (மே 9) மாநிலம் முழுவதிலும் உள்ள 38 மாவட்டங்களிலும் நடத்தப்படுகின்றன.
இதில் அரசுiப்பள்ளிகள், அரசு நிதி உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் என அனைத்துப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களும் கலந்து கொள்கிறார்கள்.
தலைப்புகள்
மேனிலை வகுப்பில் பயிலும் பள்ளி மாணவர்களுக்கு :
கட்டுரைப் போட்டி
✓ முத்தமிழ் அறிஞர் கலைஞர் எழுத்தில் சமூக நீதி
பேச்சுப் போட்டி
✓ கவிஞர் முத்தமிழறிஞர் கலைஞர்
✓ மொழியின் நாயகர் முத்தமிழறிஞர்
மாவட்ட மற்றும் மாநில அளவில் வெற்றி பெறும் 220-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்களுக்கு,
17 லட்ச ரூபாய்க்கும் மேற்பட்ட
பணப் ரிசுகள் காத்திருக்கின்றன.
குறிப்பாக, மாநில அளவில் முதல் மூன்று பரிசுகளாக – தலா ரூபாய் 15,000, 10,000 மற்றும் 7,000 வழங்கப்படுகிறது.
மேலும், பங்கேற்கும் அனைத்து மாணவர்களுக்கும் பங்கேற்புச் சான்றிதழ்களும் உண்டு.

Add a Comment