WhatsApp Image 2025-05-11 at 11.32.50 AM (2)

அறுசுவை அரண்மனையின்எழுச்சி வாய்ந்த தொடக்க விழா

அப்பாவின் பல் மருத்துவர் மருத்துவக் கல்லூரியில் பயிலும் பொழுதே அப்பாவுடன் பல நிலைகளில் உரையாடிய இனிய நண்பர் கொளத்தூரில் பல இடங்களில் தனி நிலையில் பல் மருத்துவக் கூடங்களை அமைத்துக் கொண்டு பண்பாளராக மிளிரும் மருத்துவர் குமணன் தன் கூடங்களை பல்கலைக்கழகங்கள் என்றே பெயர் சூட்டி மகிழ்ந்து வருபவர்

மார்ச் திங்கள் பத்தாம் நாள் அன்று கொளத்தூருக்கு வந்து செல்லுங்கள் என்று அழைத்து தான் கட்டி வரும்
tasty square food court பார்வையிட அழைத்து சுற்றிக்காட்டினார்
(கட்டுமான படங்கள்)

நான் உடனே சொன்னேன் பெருசுவையகக்கூடம் என்று பெயர் சூட்டலாம் என்று.

பிறகு 9.5.25 வெள்ளிக்கிழமையன்று
மாலை 7 மணி அளவில் கட்டி முடிக்கப்பட்ட அறுசுவை அரண்மனையினை திறந்து தாருங்கள் என்று அழைத்த பொழுது பெருமகிழ்ச்சியடைந்தேன்.

இரு திங்களுக்குள் அரண்மனையின் எழுச்சியைக் கண்டும் மேடையில் அமர்ந்திருக்கும் பெருமக்களைக் கண்டும் உவகையில் பூரித்து மகிழ்ந்தேன்.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *