பொறியியல் தொழில்நுட்பத் தமிழ் வளர்ச்சி மையம்
அண்ணா பல்கலைக்கழகம், சென்னை தமிழ்நாடு அரசின்
தமிழ் வளர்ச்சித் துறையின் நிதியுதவியுடன்
மண்டல அளவிலான
பேச்சு / கட்டுரைப் போட்டிகள்
(தமிழில்)
தமிழ் வளர்ச்சித் துறையின் நிதி நல்கையுடன்
பொறியியல் தொழில்நுட்பத் தமிழ் வளர்ச்சி மையம், அண்ணா பல்கலைக்கழகம், சென்னை.
நடத்திய
மண்டல மற்றும் மாநில அளவிலான
பேச்சுப்போட்டி, கட்டுரைப் போட்டிகள்
நிகழ்ச்சி அறிக்கை
சென்னை மண்டலம்
மண்டல அளவிலான பேச்சு, கட்டுரைப் போட்டிகள் பொறியியல் தொழில்நுட்பத் தமிழ் வளர்ச்சி மையம், அண்ணா பல்கலைக்கழகம், சென்னை – 25
பொறியியல் தொழில்நுட்பத் தமிழ் வளர்ச்சி மையம், அண்ணா பல்கலைக்கழகம், சென்னை-25 & தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் நிதிநல்கையுடன் மண்டல அளவிலான பேச்சு/ கட்டுரைப் போட்டிகள் 16/10/2023 அன்று நடந்தேறியது.
இப்போட்டியில் சென்னையைச் சுற்றியுள்ள பல்வேறு பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் இருந்து 120-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இடம்:
அடா லவ்லஸ் அரங்கம், கிண்டி பொறியியல் கல்லூரி வளாகம், அண்ணா பல்கலைக்கழகம், சென்னை
நாள்:
16-10-2023
நேரம்:
காலை 9
பிற்பகல் 4.00
சிறப்பு விருந்தினர் பற்றிய விவரம் மற்றும் தலைப்பு
தமிழ் வளர்ச்சித்துறையின் இயக்குநர் ஔவை ந. அருள், கலைஞர் நூற்றாண்டு நினைவு நாளிற்காகத் தாய்மொழி ஆட்சிமொழி என்ற பொருண்மையில், ஒருவர் தன் எண்ணங்களைத் தமிழ் மொழியில்தான் வெளிப்படுத்த முடியும் என்றும், கணினித்தமிழ் தொடர்பான ஆய்வுகள் மேன்மேலும் வளர வேண்டும் என்றும், திருக்குறள் முற்றோதல் பற்றியும், எளிமையாகத் தமிழை எவ்வாறு தட்டச்சுச் செய்யலாம் என்பது பற்றியும் தமிழ்நாடு அரசு தமிழை வளர்ப்பதற்காக எடுக்கும் முயற்சிகள் பற்றியும் தம் சிறப்புரையில் எடுத்துரைத்தார்கள்.

Add a Comment