WhatsApp Image 2025-05-30 at 12.00.15_a1c3fd5e

கவின்மிகு நடிப்புச் சுரங்கம் புதைந்ததே!

நடிகர் ராஜேஷ் (1949-2025) அருமையான நடிகர்
சிறந்த சொற்பொழிவாளர்
உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் எட்டாண்டுகளுக்கு முன் நடைபெற்ற ஒரு கருத்தரங்கில் அவருடன் உரையாடி இருக்கிறேன்.

ஒருமுறை அவர் இல்லத்தில் சந்தித்துப் பேசிய பொழுது எந்த யாரைக் குறித்து பெருமிதமாக பேசி மகிழ்ந்தார்.

என்னுடைய அத்தை மகன் முனைவர் கதிரவன் தான் ஏழாம் வகுப்பு படிக்கும் பொழுது திருவல்லிக்கேணி தேரடி தெருவில் உள்ள கெல்லட் மேனிலைப் பள்ளியில் வரலாறு மற்றும் புவியியல் பாடங்களின் ஆசிரியராக இருந்தார் என்று சொன்னதை அவரிடம் நான் சொன்னபோது சிரித்துக் கொண்டே இப்போதும் மாணவர்கள் என்னை நினைவில் வைத்திருக்கிறார்களா என்று சொல்லி மகிழ்ந்தார்.

தண்ணீர் தண்ணீர் திரைப்படத்தில் நன்மை தீமை கலந்த இரு நிலை மாற்றங்கள் நெஞ்சில் நீங்கா இடம் பெற்றுள்ளது.

திரை வானிலும்
நில மனை தொழில் உலகத்திலும் தன்னை ஆட்படுத்திக் கொண்ட விதம் வியப்பை நல்கும்.

உதிரிப் பூக்கள் புகழ் இயக்குநர் மகேந்திரன் அவர்களின் நெருங்கிய உறவினர்

அவரின் மறைவு துயரம் தருகிறது.
அவர் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *