
தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகத்தில் பல்வேறு நிலைகளில் அரும்பணியாற்றி துணைச் செயலாளர் பணியிலிருந்து ஓய்வு பெறும் திரு கண்ணன் அவர்கள்
‘கதங்காத்துக் கற்றடங்கல் ஆற்றுவான் செவ்வி’ என்ற குறள் நெறியில் போற்றுதலுக்குரிய
ஆற்றல் பெற்றவர் என்றால் மிகையாகாது.
அன்பின் மிகுதியில் என்னிடம் மகிழ்ச்சியாக பல தலைப்புகளில் நுட்பமாக உரையாடுவார்.
அலுவல் சார் கோப்பு நடவடிக்கைகளில் மிகுந்த ஆர்வம் காட்டினாலும் தகுந்த சொற்களைத் தகுநிலைக்கேற்ப தக்கவாறு திருத்தி அரசாணைகளை அணி செய்வதில் வல்லமை மிக்கவராகப் பணியாற்றினார்.
தன்னிடம் பணியாற்றும் அரசுப் பணியாளர்களிடம் பொறுமையாகத் தன் ஆணித்தரமான கருத்துகளை செவ்வனே சொல்லிக் காட்டும் பாங்கு பாராட்டுக்குரியதாகவே அமையும்.
அலுவலகத்தில் தனக்குத் தனியறை ஏன் ஒதுக்கினார்கள் என்று அவரே வினா தொடுத்து விடையாக பல்வேறு கருத்துக்களை ஆய்ந்து சிந்திப்பதற்காகத்தான் தனி அறை ஒதுக்கப்பட்டுள்ளது, ஆதலால் எந்நேரமும் சிந்தனைக் கூடமாகத்தான் அலுவலர் அறைகள் பரிமளிக்க வேண்டும் என்பார்.
கடந்த மூன்றாண்டுகளில் ஒரு முறை கூட முகம் சுளிக்காமல்
நேரம் பார்க்காமல் தலைமைச் செயலகத்திலும் சில நிலைகளில் தமிழ் வளர்ச்சித துறை இயக்ககத்திலும் அலுவல் சார் கோப்பு வரைவதில் பேரார்வமாகப் பணியாற்றியதைக் கண்டு மகிழ்ந்திருக்கிறேன்.
தமிழ் இலக்கியத்திலும், கணினியுலகிலும் தனி ஈடுபாடு
திரு கண்ணனுக்கு உண்டு.
அரசு நிலையில் பலருக்கும் தெரியாத வரைவு நுட்பங்களை பணி நிறைவுக்கு பின் கணினி வழியாக பாடமாக நீங்கள் நடத்த வேண்டும் என்று 30.5.25 வெள்ளிக்கிழமை அன்று நேரில் சொன்ன பொழுது அப்படியே ஆகட்டும் என்றார்.
பல்லாண்டுகள் வாழ்க
திரு கண்ண


Add a Comment