செய்தி வெளியீடு எண்: 1360
நாள் : 17.06.2025
மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் அவர்களால் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் 16.04.2025ஆம் நாளன்று அறிவியல் தமிழறிஞர் மணவை முஸ்தபா அவர்களின் பிறந்த நாளான ஜீன் 15ஆம் நாளினை தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் மாவட்ட அளவில் அரசு விழாவாகக் கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டவாறு 19.06.2025 வியாழக்கிழமை, திருச்சிராப்பள்ளி மாவட்டம், மணப்பாறை, அரசு கலைக் கல்லூரியில் ‘தமிழறிஞர் மணவை முஸ்தபா அவர்களின் பிறந்தநாள் விழா’ கொண்டாடப்படவுள்ளது.
தமிழ்மீது அளப்பறிய பற்றுக் கொண்டிருந்த மணவை முஸ்தபா அவர்கள் நவீன அறிவியல் போன்ற துறைகளிலும் தமிழ் தடம் பதிக்க வேண்டும் என்ற அக்கறையோடு செயல்பட்ட அரிய ஆளுமை ஆவார். பிரிட்டானிக்கா கலைக் களஞ்சியத்தை தமிழில் கொண்டு வருவதற்கான குழுவைத் தலைமையேற்று வழி நடத்தியவர். அறிவியல் தமிழ் கருத்தரங்கை முதன்முதலில் நடத்தியவர்.
அறிவியல், தொழில்நுட்பம், மருத்துவம், கணினி ஆகிய துறை சார்ந்த கலைச்சொல் அகராதிகளை வெளியிட்டு அறிவியல் தமிழ் முன்னேற்றத்திற்காக தொடர்ந்து பணியாற்றிய அறிவியல் தமிழறிஞர் மணவை முஸ்தபா அவர்களின் பிறந்தநாளான 15.06.2025 அன்று அரசு விழாவாகக் கொண்டாடப்படும் என மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் அவர்களால் 16.04.2025ஆம் நாளன்று அறிவிக்கப்பட்டது.
அதன்படி, அறிவியல் தமிழறிஞர் மணவை முஸ்தபா அவர்களின் பிறந்தநாள் விழாவினை கொண்டாடும் பொறுட்டு 19.06.2025 வியாழக்கிழமை அன்று திருச்சிராப்பள்ளி, மணப்பாறை. அரசு கலைக் கல்லூரியில் அறிவியல் தமிழ்க் கருத்தரங்கம், அறிவியல் தமிழ் வினாடி-வினா போட்டி, அறிவியல் தமிழ்ப் புத்தகக் கண்காட்சி நடத்தப்படவுள்ளன.
அறிவியல் தமிழறிஞர் மணவை முஸ்தபா அவர்களின் பிறந்தநாள் விழாவின் தொடக்க நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சி இயக்குநர் முனைவர் ஒளவை அருள் அவர்கள் வரவேற்புரையும் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறையின் அரசு செயலாளர் திரு.வே.ராஜாராமன், இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையுரையும் திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.மா.பிரதீப் குமார், இ.ஆ.ப., அவர்கள் வாழ்த்துரையும் ஆற்றவுள்ளனர். மாண்புமிகு நகராட்சி நிர்வாகம்- நகரப்பகுதி மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் திரு.கே.என்.நேரு அவர்கள், மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் திரு.மு.பெ.சாமிநாதன் அவர்கள். மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் திரு.அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் அறிவியல் தமிழ் புத்தகக் கண்காட்சியை திறந்து வைத்து விழாப் பேருரை ஆற்றவுள்ளனர்.
நாடாளுமன்ற உறுப்பினர் திருமிகு.செ.ஜோதிமணி அவர்கள், மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் திரு.ப.அப்துல் சமது அவர்கள், நாகப்பட்டினம் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஆளூர் ஷாநவாஸ் ஆகியோர் சிறப்புரை ஆற்றவுள்ளனர்.
திருநெல்வேலி மண்டிலத் தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர் திரு.வ.சுந்தர் அவர்கள் நன்றியுரை ஆற்றவுள்ளார்.
தொடக்க நிகழ்ச்சியைத் தொடர்ந்து நாடறிந்த மருத்துவர் சு.நரேந்திரன் அவர்களின் தலைமையில் அறிவியல் தமிழ்க் கருத்தரங்கம் நடைபெறவுள்ளது. ‘கால்நடை மருத்துவக் கண்ணோட்டம்’ என்ற தலைப்பில் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணைய உறுப்பினர் மருத்துவர் பெரு.மதியழகன் அவர்களும் ‘எளிய தமிழில் மருத்துவம்’ என்ற தலைப்பில் கி.ஆ.பெ.விசுவநாதம் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் மருத்துவர் ச.குமரவேல் அவர்களும் ‘மருத்துவ அறிவியல் தமிழ்’ என்ற தலைப்பில் அறிவியல் தமிழறிஞர் மணவை முஸ்தபா அவர்களின் மகன் மருத்துவர் மு.செம்மல் அவர்களும் கருத்துரை வழங்கவுள்ளனர். அதனைத் தொடர்ந்து, மருத்துவ அறிவியல், வேளாண் மற்றும் வேளாண் அறிவியல், பொறியியல் அறிவியல், பொது அறிவியல் மாணவர்களுக்கிடையே அறிவியல் தமிழ் வினாடி-வினா போட்டி நடைபெறவுள்ளது. இப்போட்டியில், மருத்துவர் ச.குமரவேல் அவர்கள் நடுவராக செயலாற்ற உள்ளார்.
இந்நிகழ்ச்சிக்கான மேற்கொண்டு வருகிறது. முன்னெடுப்புகளைத் தமிழ் வளர்ச்சித் துறை
வெளியீடு: இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை, சென்னை-9
எங்கும் தமிழ்
எதிலும் தமிழ்
தமிழ் வளர்ச்சித் துறை
அறிவியல் தமிழறிஞர்
மணவை முஸ்தபா
பிறந்தநாள் விழா – அழைப்பிதழ்
நாள் : 19.06.2025,
நேரம் காலை 10.30 மணி
இடம்: அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி,
மணப்பாறை,
திருச்சிராப்பள்ளி
நிகழ்ச்சி நிரல்
10.30 மு.ப
தமிழ்த்தாய் வாழ்த்து
வரவேற்புரை
ஔவை அருள்
இயக்குநர், தமிழ் வளர்ச்சித் துறை
முன்னிலையுரை
திரு.வே.ராஜாராமன்.இஆப,
அரசு செயலாளர், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை
வாழ்த்துரை
திரு.மா. பிரதீப் குமார்,இஆப,
மாவட்ட ஆட்சித்தலைவர், திருச்சிராப்பள்ளி
அறிவியல் தமிழ் புத்தகக் கண்காட்சியை திறந்து வைத்து விழாப் பேருரை :
திரு.கே.என்.நேரு அவர்கள்
நகராட்சி நிர்வாகம் நகரப்பகுதி மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர்
திரு. மு.பெ.சாமிநாதன் அவர்கள் மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர்
திரு அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள்
மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர்
சிறப்புரை
திருமிகு செ.ஜோதி மணி அவர்கள்
நாடாளுமன்ற உறுப்பினர்
திரு.அப்துல் சமது அவர்கள் மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர்
திரு.ஆளூர் ஷாநவாஸ் அவர்கள் நாகப்பட்டினம் சட்டமன்ற உறுப்பினர்
நன்றியுரை
திரு.வ.சுந்தர்
மண்டிலத் தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர். திருநெல்வேலி
அறிவியல் தமிழ்க் கருத்தரங்கம்
11.30-01.30
தலைமை
மரு. சு.நரேந்திரன்
கால்நடை மருத்துவக் கண்ணோட்டம்
: மரு. பெரு.மதியழகன்
உறுப்பினர். தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையம்
எளிய தமிழில் மருத்துவம்
மரு.ச.குமரவேல் முதல்வர் கி.ஆ.பெ.விசுவநாதம் அரசு மருத்துவக் கல்லூரி, திருச்சி
மருத்துவ அறிவியல் தமிழ்
மரு.மு.செம்மல்
அறிவியல் தமிழ் வினாடி-வினா
02.30-04.00
நடுவர்
மரு. ச.குமரவேல்
முதல்வர் கி.ஆ.பெ.விசுத அரசுமருத்துவக் கல்லூரி. திருச்சி
பங்கேற்பு
மருத்துவ அறிவியல்,
வேளாண் மற்றும் வேளாண் அறிவியல், பொறியியல் அறிவியல், பொது அறிவியல் மாணவர்கள்
நாட்டுப்பண்

Add a Comment