WhatsApp Image 2025-06-22 at 10.14.04_c82d078c

பாவேந்தரின் நூலாட்சி தங்களால் உயரக் கண்டோம்!

அப்பாவின் இனிய நண்பர் பேராசிரியர் இராமர் இளங்கோ
(10.9.1944-19.6.2025)
மறைந்தார் என்ற செய்தி துயர் தருகிறது.

பலமுறை அப்பாவும் பேராசிரியர் அவர்களும் தொலைபேசியில் நீண்ட நேரம் பேசியதைக் கேட்டு மகிழ்ந்துள்ளேன்.

பாவேந்தர் பாரதிதாசன் அவர்களைக் குறித்த அரிய தகவல்களை தொகுக்கும் பேராற்றல் இவருக்கு உண்டு என்று அப்பா அடிக்கடி சொல்லி மகிழ்வார்.

பாவேந்தரின் பல நூல்களோடு
அரிய தமிழ் நூல்களையும்
உலகத்தமிழாராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநராக பணியாற்றிய எட்டாண்டுப் பணிக்காலத்தில் பெருமளவு வெளியிட்டுப் பெருமை சேர்த்துள்ளார்.

தந்தையார் போற்றி மகிழ்கின்ற பேராசிரிய பெருமக்களான
ஒப்பிலா மதிவாணன்
மற்றும் புதுவை மு இளங்கோவன் இருவரும்
பெரும் பேராசிரியர் இராமர் இளங்கோவால் பட்டைத் தீட்டப்பட்ட வைரங்கள் என்ற புகழ் மகுடத்திற்கு உரியவர்கள்.

தமிழ் வளர்ச்சித் துறை வாயிலாக பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த நாள் விழாவில் பேராசிரியர் இராமர் இளங்கோ அவர்களை உரையாற்றுவதற்கு அழைத்த போதெல்லாம்
வர விருப்பம் உடல் ஒத்துழைக்கவில்லை அருள் என்று சொல்லித் தவிர்த்தார்.

அண்மையில் ஆங்கில இதழான டைம்ஸ் ஆப் இந்தியா இதழில் பாவேந்தரைக் குறித்த செறிவான கட்டுரையினை நண்பர் வினோத் குமார் எழுதியதைப் பாராட்டி கூடுதலாக பாவேந்தரைப் பற்றி மேலும் எழுத வேண்டும் என்றும் பேரறிஞர் இராமர் இளங்கோ அவர்களின் தொலைபேசி எண்ணையும் வழங்கி பேட்டி எடுக்குமாறு கேட்டுக் கொண்டேன்.

எடுத்த முயற்சி எதுவும் நடைபெறவில்லை

பேராசிரியர் இராமர் இளங்கோ அவர்களின் நெருங்கிய உறவினரும் ஆய்வறிஞர்
சின்னிகிருஷ்ணா தொடர்ந்து என்னிடம் பேசிக் கொண்டிருந்தார்.

அவர் எழுதி வைத்த தாள்களை மாணவச் செல்வங்கள் தான் அச்சு வாகனத்தில் ஏற்ற வேண்டும்.

பேராசிரியரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் மாணவச் செல்வங்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கல்.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *