ஆடுக ஊஞ்சல் ஆடுகவே!
எந்தையார் பெரிதும் மதித்துப் போற்றிய பொதுப்பணித்துறையின்
தலைமைப் பொறியாளர் திலகமும் நினைவில் வாழும் சமயச் சான்றோர் குப்புராஜ் அவர்களின் திருமகனான நாடறிந்த கண் மருத்துவர் பிரேம் குமார் கண் மருத்துவர் திருமதி பிரேமா அவர்களின் மகன் விக்னேஷ் மற்றும் பிரவீனா திருமண மங்கல நிகழ்வில் 5.6.25 அன்று மகாலிங்கபுரத்தில் உள்ள எம்எல்எம் திருமணக்கூடத்தில் மண மக்களுக்காக அமைக்கப்பட்டிருந்த ஊஞ்சலில் சிறிது நேரம் அமர்ந்த பொழுது ஊஞ்சலைக் குறித்து பல நினைவுகள் மனத்திரையில் நிழலாடியது ..
அண்ணா நகர் பழைய இல்லத்தில் அம்மா ஊஞ்சலை வாயிலிலும் மற்றொன்றை முகப்பு அறையிலும்
பொருத்தியிருந்ததும் மாலையில் இல்லத்திற்கு வந்தபின் முகப்பு அறையிலுள்ள ஊஞ்சலில் அப்பா நூல்கள் பல விரித்துப் படித்துக் கொண்டிருப்பதும்
எதிர்வீட்டுப் பிள்ளைகள் வாயிலிலுள்ள ஊஞ்சலில் தாங்களாகவே வந்து ஊஞ்சலில் ஆடிக்கொண்டிருந்த காட்சிகள் நினைவில் படர்ந்தது…

Add a Comment