POST: 2025-07-27T12:20:06+05:30

2 சிவமயம் திருச்சிற்றம்பலம்

சேக்கிழார் ஆராய்ச்சி மையம்

சென்னை

ஸ்ரீ இராமச்சந்திரா மருத்துவம் மற்றும் ஆராய்ச்சிப் பல்கலைக்கழகம்

இணைந்து நடத்தும்

33ஆம் ஆண்டு தெய்வச் சேக்கிழார் விழா அழைப்பிதழ்

2025 ໑໙ 24,25,26 & 27 வியாழக்கிழமை, வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை

நிகழ்விடம்

ஸ்ரீ இராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டர்

எண் 24/13ஏ, தெற்கு நிழற் சாலை, வாசுதேவ நகர் விரிவு திருவான்மியூர், (திருவான்மியூர் பேருந்து நிலையம் அருகில்) சென்னை -600 041.

தெய்வச் சேக்கிழார் விழா

முப்பத்துமூன்றாம் ஆண்டு

பேரன்பில் நிறைந்த பெரியீர்,

வணக்கம்.

அமைதி, ஆனந்தம், உயர்ந்த குறிக்கோள் இவற்றோடு உலக மாந்தர் அனைவரும் குறிப்பாகத் தமிழர்கள், நல்லன எல்லாம் பெற்று வாழ்வாங்கு வாழ, உதவும் இலக்கியங்களுள் தெய்வச் சேக்கிழார் அருளிச் செய்த பெரியபுராணம் முதன்மையானது.

சைவ சமயம் தழைத்தோங்க தன்னலமற்று உழைத்த திருத்தொண்டர்களின் வரலாறுகளை ஆவணப்படுத்தி, பக்தி நெறியும் தொண்டு நெறியும் போற்றி, வாழ்வியல் நெறியை முடிபாக காட்டவல்லது பெரியபுராணம்.

இத்தகைய மாபெரும் இலக்கியச் செல்வத்தை நமக்கு அளித்த சேக்கிழார் பெருமானுக்கு, சென்னை சேக்கிழார் ஆராய்ச்சி மையம் ஆண்டுதோறும் கவின்மிகு விழா எடுத்து வருகிறது. இவ்வாண்டு இவண் அமையப் பெற்றுள்ள நிகழ்ச்சி நிரல் வண்ணம் தெய்வச் சேக்கிழார் விழா, சென்னை, திருவான்மியூர், ஸ்ரீ இராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டரில் நடைபெறும்.

தாங்கள் சுற்றமும் நட்பும் சூழ வருகைதந்து செவிக்கும் சிந்தைக்கும் இன்பம் கொள்க என அன்புடன் அழைக்கிறோம்.

நீதியரசர் எஸ். ஜெகதீசன்

தலைவர்

சேக்கிழார் ஆராய்ச்சி மையம்

மாலை 6.15 மணி முதல் 6.45 மணி வரை

எழிலுரை

பெரியபுராணத்தில் நயம்

முனைவர் தெ. ஞானசுந்தரம்

மேனாள் துணைத் தலைவர், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம்

மாலை 6.45 மணி முதல் 8.30 மணி வரை

உரைவேந்தர் ஒளவை சு. துரைசாமிப் பிள்ளை அரங்கம்

சிவாலயம் வெளியீடு

திருவருட்பா மூலமும்

உரைவேந்தர் ஔவை சு. துரைசாமிப் பிள்ளை அவர்கள் உரையும் 10 தொகுதிகள்

ஆய்வரங்கம்

வரவேற்புரை

திரு இரா. வெங்கடாசலம்

அறங்காவலர், சேக்கிழார் ஆராய்ச்சி மையம்

தலைமையுரை

திருக்கயிலாய பரம்பரை வேளாக்குறிச்சி ஆதீனம் 18-வது குருமகா சந்நிதானம்

ஸ்ரீலஸ்ரீ சத்தியஞான மகாதேவ தேசிக பரமாசாரிய சுவாமிகள்

முனைவர் ஔவை ந அருள்

இயக்குநர், தமிழ் வளர்ச்சித் துறை, தமிழ்நாடு அரசு

நூல் திறனாய்வு

இலக்கியச்சுடர் த. இராமலிங்கம்

முனைவர் அருட்பா ப. சரவணன்

உதவி இயக்குநர், தமிழ்நாடு பாடநூல் கழகம்

நன்றியுரை

இலால்குடி பா. எழில்செல்வன்

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *