நூற்றாண்டு காணும் பல்சுவைப் பனுவல் !

தினமணி – 1 – 4 – 2022 – நடுப்பக்கம் இரண்டாம் கட்டுரை – பக்கம் எண் 6

நூற்றாண்டு காணும் பல்சுவைப் பனுவல் !

முனைவர் ந அருள்

உலகப்புகழ் பெற்ற திங்களிதழ் ரீடர்ஸ் டைஜஸ்ட் , உயரிய சிந்தனையை மக்களிடையே கொண்டு செல்ல வேண்டும் என்ற உணர்வோடு நிறுவப்பட்டது.

ரீடர்ஸ் டைஜஸ்ட் இதழுக்கு என் பெற்றோர் நீண்ட காலமாக சந்தாதாரர்களாக இருந்தனர்.

குழுந்தைகளுக்கு ஏற்ற பரிசு இந்த இதழ் மட்டும் தான் என்று எனக்கு உணர்த்தியிருந்தனர்.

நானும் , என் சகோதரர்களும் இந்த இதழின் கட்டுரைகனை விரும்பிப் படித்தோம்.

இந்த இதழில் வெளியான
“ கல்விக் கட்டுரைகள் ‘, ‘ நகைச்சுவைப் பாடல் ‘, ‘
தன் முன்னேற்றக் கருத்துரைகள், ஒருவர் வாழ்வில் நிகழ்ந்தவை ‘, சொல்லகராதி உருவகம் போன்றவை அளைவருக்கும் ஆங்கில மொழி கற்றலுக்கு ஆதாரமாக விளங்கின.

ரீடர்ஸ் டைஜஸ்டின் பத்திகள், வாசிப்போரைத் தன் வயமாக்கும் தன்மை கொண்டவை.

‘வாழ்க்கை அப்படித்தான்,
சீருடை யில் சிரிப்பலைகள் அறிவியல் கண்டுபிடிப்புகள்’, ‘சாகசங்கள்,
ஆய்வுகள்,
‘புகழாளரின் வாழ்க்கை வரலாற்று புத்தகப் பகுதி எனப் பல உண்டு.

ரீடர்ஸ் டைஜஸ்ட் இதழ் எனது அங்கில ஆற்றலை அதிகப்படுத்தியது.

ரீடர்ஸ் டைஜஸ்ட் இதழ் 41 நாடுகளில் 23 பதிப்புகளுடன் பிப்ரவரி 1922 – இல் தொடங்கியது.

முதலாம் உலகப் போரில் காயமடைந்திருந்த அமெரிக்க நாட்டைச் சேர்ந்த டிவீட் வாலேஸ் என்பவரின் சிந்தையில் உதித்ததே இந்த ரீடர்ஸ் டைஜஸ்ட் .

இவ்விதழ் தொடங்கி இருபதாண்டுகளில் 1942 வரை இதழுக்கு வந்த ஆதாயத் தொகையை, தான் மட்டுமே துய்க்காமல், அப்பணத்தைத் தன்னுடைய 148 ஊழிகளுக்கும்
பிரித்துக் கொடுத்ததுடன், 15% உயர்வும் அளித்த பெருமைக்குரியவர் இவர்.

அமெரிக்காவின் நியூ முனைவர் பார்க் நகரில், பிப்ரவரி 1922 இல் 64 பக்கங்களில், 31 கட்டுரைகளுடன் 5000 படிகள் வெளியிடப்பட்டன .

இவ்விதழ் கையடக்க அளவில் அமைந்தது.

புனை கதைகளோ, படங்களோ, விளம்பரங்களோ இல்லாமல் வெளியிடப்பட்டது. இதன் சிறப்பாகும்.

இதழ் தொடங்கப்பட்டு ஏழாண்டுகளில் ( 1929 ) ரீடர்ஸ் டைஜஸ்ட் சந்தாதாரர் எண்ணிக்கை 40 மடங்கு அதிகரித்து இரண்டு லட்சத்தைத் தொட்டது.

அடுத்த ஏழு ஆண்டுகளில் ( 1936 ) வாசகர்கள் எண்ணிக்கை முன்பைக் காட்டிலும் பத்து மடங்கு அதிகரித்து இருபது லட்சத்தை எட்டியது.

அறுபதாண்டுகளில் ( 1994 ) முந்தைய வாசகர் எண்ணிக்கையை விட நூறு மடங்கு பெருகியது.

இப்படி சாதனை நிகழ்த்திய இதழ் ரீடர்ஸ் டைஜஸ்ட் ஆகும்.

1949 – ஆம் ஆண்டிலிருந்து ரீடர்ஸ் டைஐஸ்ட் ஆங்கிலம், இலத்தீன் அமெரிக்கன் , போர்த்துகீசியம், பின்னிஷ் டேனிஷ், ஜப்பானிய ஆஸ்திரேலியன், நார்வேஜியன், பிரெஞ்சு, ஜெர்மன், இத்தாலியப் பதிப்புகளாக வெளிவந்தது.

2005 – ஆம் ஆண்டில் சீனப் பதிப்பு வெளியிட்டது.

1954 -இல், 40000 பிரதிகளுடன் ரீடர்ஸ் டைஜஸ்ட் இந்தியப் பதிப்பு வெளிவந்தது.

அடுத்த ஆண்டு ( 1955 ) இவ்விதழ் விளம்பரத்திற்கு வழிவிட்டது.

தரூர் பரமேசுவரன் ( நாடாளுமன்ற உறுப்பினர் சசி தரூரின் தந்தை) மும்பையில் ரீடர்ஸ் டைஜஸ்ட் அலுவலகத்தைத் திறந்து அதன் விளம்பர இயக்குநராகப் பணியாற்றினார்.

ரீடர்ஸ் டைஜஸ்ட்டின் பொன்விழா ஆண்டை முன்னிட்டு வெளிவந்த சிறப்பு இதழுக்கு இங்கிலாந்தின் அரசியார் எலிசபெத் பாராட்டுரை வழங்கியிருந்தார்.

அவ்வண்ணமே சென்ற திங்கள் ரீடர்ஸ் டைஜஸ்ட்டின் நூற்றாண்டு நிறைவு விழா மலருக்கு அவர் பாராட்டு கடிதம் வழங்கினார்.

இது பொற் குடத்துக்குப் பொட்டிட்டது போன்று இதழுக்கு வாய்த்த அரசு மரியாதையாகும்.

ஒட்டு மொத்தமாக ரீடர்ஸ் டைஜஸ்ட், கடந்த 100 அண்டுகளில் கிட்டத்தட்ட 1,200 இதழ்களில் 35,000 கட்டுரைகளை வெளியிட்டுள்ளது .

இந்திய நாட்டில் அயலக ஊடகங்களின் முதவீட்டை நிறுத்திவிட வேண்டும் என்று மத்திய அமைச்சரவை முடிவு செய்தபோது, ரீடர்ஸ் டைஜஸ்ட் முதலீட்டை நாம் தவிர்க்கக்கூடாது என்று நேரு பெருமகனார் வாதிட்டு நிலைநிறுத்தினார்.

இதிலிருந்து, பிரதமர் நேருவுக்கு இவ்விதழ் மீது இருந்த பெருமதிப்பை நாம் அறியலாம்,

இந்த மாத இதழ். அதே பாங்கில் பல்வேறு ஏடுகளின் செய்திகளைத் திரட்டி அறிவியல் விருந்து, நிவவியல் விருந்து, கணக்கியல் விருந்து என்று பல ஆங்கில இதழ்களை வெளியிட்டது.

இதைவிடச் சிறப்பு என்ன வென்றால் விருத்தின் விருந்து என்ற பொருளின் ‘ டைஜஸ்ட் ஆஃப் தி டைஜஸ்டு என்ற ஒரு சஞ்சிகை வரத் தொடங்கியது.

ரீடர்ஸ் டைஜஸ்ட் வெளியிட்ட ‘ எப்படி வாழ்வது ‘ என்ற சிறப்புத் தொகுதியை என் தந்தையார் தொலைத்து விட்டார்.

அவர் இலண்டன் மாநகருக்கு சென்றிருந்த போது, ரீடர்ஸ் டைஜஸ்ட் தலைமை அலுவலகத்திற்கே சென்று வினவிய போது ‘ அந்தத் தொகுதியை நாங்கள் மீளவும் வெளியிடவில்லை என்றார்களாம்
.

அதை என் தந்தை ஒரு கூட்டத்தில் குறிப்பிட்ட போது, அது தன்னிடம் இருப்பதாகக் கூறிய பேராசிரியர் தெ. ஞானசுந்தரம் அதனை என் தந்தையாருக்கும் கொடுத்தார்.

அதனைக் குறிப்பிட்டு என் தந்தை அடிக்கடி அவரைப் பாராட்டுவார் .

ரீடர்ஸ் டைஜன்டைப் போலவே, தமிழகத்தில் 1947 – ஆம் ஆண்டு நவம்பரில் மஞ்சரி எனும் இதழை இராமரத்தினம் என்பவர் தொடங்கினார்.

ரீடர்ஸ் டைஜஸ்ட் பாணியிலேயே பல மொழிகளில் வெளியாகும் ஏடுகளில் இருந்து பிறந்த செய்திகள், கலை இலக்கியப் படைப்புகள், மனித நேய நிகழ்ச்சிகள் ஆகியவற்றைச் சுவை குன்றாமல் சுருக்கித் தருதல் மஞ்சரியின் நோக்கமாகும்.

டைஜஸ்ட் இதழ்த் தொகுதிகளுடன் மஞ்சரியின் தொகுதிகளைத் தம் இல்லத்தில் அடுக்கி வைத்திருந்த பேரறிஞர் பெ.நா. அப்புசாமி ‘கலைக்களஞ்சியங்களை விட இவ்விதழ்கள் பெருமை வாய்ந்தவை’ என்று குறிப்பிட்டது இன்றும் என் நெஞ்சில் நிழலாடுகின்றது.

புகழ்பெற்ற பத்திரிகையாளர் சாவி அவர்கள் ரீடர்ஸ் டைஜஸ்டை போலவே தரமான கட்டுரைகள் , மொழிபெயர்ப்புக் கதைகள் ,குறுநாவல், ஏராளமான தகவல்கள், துணுக்குகள் என்று தமிழிலும், ஒரு மாத இதழ் வெளிவரவேண்டும் என்று விழைந்து, ” பூவாளி என்ற இதழைத் தொடங்கியதும் குறிப்பிடத்தகுந்தது.

இன்றைக்கு அதே போல இருவாட்சி என்ற மாத இதழ், ரீடர்ஸ் டைஜஸ்ட் போல இலக்கியத் துறைமுகமாக விளங்குகிறது.

ஒரு நூற்றாண்டு கண்ட ரீடர்ஸ் டைஜஸ்ட் இன்னும் பல நூற்றாண்டுகள் காண வேண்டும் என்பது என்னைப் போன்ற அவ்விதழின் கோடிக்கணக்கான வாசகர்களின் விருப்பமாகும்.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *