தினமணி நாளிதழில் 14 11 2020 அன்று வெளிவந்த ‘ நேருவின் நிகரற்ற சிந்தனை வளம் ‘ என்று மொழிபெயர்ப்புத்துறை இயக்குநர் ஒளவை அருள் எழுதிய கட்டுரைக்கு வரப்பெற்ற கருத்துரைக் கடிதங்கள் …
21 11 2020
பக்கம் எண் 6
1.நல்ல தூண்டுகோல்
மொழிபெயர்ப்புத் துறை இயக்குநர் ஒளவை அருள் எழுதிய ‘ நேருவின் நிகரற்ற சிந்தனை வளம் ‘ கட்டுரை ( 14.11.2020 ) படித்தேன். ஜவஹர்வால் நேரு ஒவ்வொரு நாளும் பதினாறு மணி நேரத்திற்கு மேல் பணியாற்றுவார் என்ற செய்தி இன்றைய அரசியல் தலைவர்களுக்கு ஒரு நல்ல தூண்டுகோல் ஆகும்.
தனது மகள் இந்திராவுக்கு நேரு எழுதிய கடிதங்கள் வரலாற்றுப் புகழ் மிக்கவையாகும்.
அவர் எல்லாவற்றையும் தான் எளிதாகக் கடந்து வருவதற்குப் படிப்பும் எழுத்துமே தனக்குத் துணை புரிந்தன என்று கூறியிருப்பது, நூல்களைப் படிக்க வேண்டியதன் இன்றியமையாமையை உணர்த்துகிறது. பிரெஞ்சு கலைக்கழகத்திற்கு நேரு வருகை தந்த போது தமிழறிஞர் கந்தசாமிப் பின்ளையுடன் நிகழ்ந்த உரையாடல் தமிழின் மேன்மையையும் நேருஜியின் பன்பாட்டையும் ஒருங்கே உனார்த்தியது .
— கண்ணபிரான்,
திருநெல்வேலி.
2.சமயோசித ஆற்றல்
மொழி பெயர்ப்புத் துறை இயக்குநர் ஒளவை அருள் எழுதிய ‘ நேருவின் நிகரற்ற சிந்தனை வளம் ‘ கட்டுரை ( 14.11.2020) படித்தேன். ஜவஹர்லால் நேருவின் பன்முக ஆற்றலை வெளிப்படுத்துவதாக அமைந்திருந்தது. மகாத்மா காந்தி மறைந்தபோது. நேரு மனம் கலங்கிக் கூறிய வரிகளுக்கு நிகராக கம்பராமாயணத்தில் தசரதன் இறந்ததைக் தேட்ட ராமன் புலம்பிய வரிகளைக் குறிப்பிட்ட தமிழறிஞர் கந்தசாமிப் பிள்ளையின் சமயோசித ஆற்றல் பாராட்டுக்குரியது. சங்க காலத்தில் தமிழில் பயன்பாட்டில் இருந்த சொற்களின் எண்ணிக்கையையும் ஆங்கிலத்தில் அப்போது இருந்த சொற்கள் எண்ணிக்கையையும் இக்கட்டுரை மூலம் அறிந்து வியப்தேன் .
– வி. பொன்னம்பலம்,
திருச்செங்கோடு .
3.மிகையன்று
ஆங்கிலேய அரசு நேருவின் சதோதரி விஜயலட்சுமி பண்டிட்டை அமைச்சராக நியமித்தபோது. நேரு தனது சகோதரிக்கு எழுதிய கடிதம் அவருடைய நகைச்சுவை உனர்யை வெளிப்படுத்துகிறது. நேரு மறைந்த போது ராஜாஜி எழுதிய இரங்கல் செய்தி. நேருவின் பொருளாதார, சமுதாய வளர்ச்சி சிந்தனைகளை நன்கு வெளிப்படுத்தியது. நாள் முழுதும் உழைத்துக் கொண்டிருந்த நேருஜி, இலக்கியத் துறையிலும்
பங்களித்திருப்பது வியப்பளிக்கிறது. நேருவை ‘ நவீன இந்தியாவின் சிற்பி ‘ என்று கூறுவது மிகையன்று
– கா. மரகதம்,
செங்கம் .

Add a Comment