ஆய்வும் -செயலாக்கமும்
ஆட்சி மொழித் திட்ட செயலாக்க ஆய்வு மேற்கொண்டு தயாரிக்கப்பட்ட ஆய்வறிக்கைகளை
19.8.2025 செவ்வாய்க்கிழமை
காலை 11 மணி முதல்
மதுரை மாநகராட்சி அலுவலகம்
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம்
மதுரை காவல் ஆணையர் அலுவலகம்.
ஆகிய மூன்று அலுவலகங்களிலும் தொடர்ந்து தமிழ் வளர்ச்சித் துறையால் ஆட்சி மொழித்திட்ட செயலாக்க ஆய்வின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட ஆய்வறிக்கையினை
தத்தம் உயர் அலுவலர்களிடம்
வழங்கியதோடு அவர்களின் முன்னிலையில் அலுவலர்கள்
மற்றும் பணியாளர்களுக்கு ஆட்சி மொழித் திட்டச் செயலாக்கம் குறித்து உரையாற்றினேன்.
கலந்தாய்வுக் கூட்டத்தில் தமிழ் வளர்ச்சித்துறையின்
மதுரை மாவட்டத் துணை இயக்குநர் முனைவர் திருமதி சுசீலா
சிவகங்கை மாவட்ட உதவி இயக்குநர்
திருமதி சீதாலட்சுமி
மற்றும் இராமநாதபுரம் மாவட்ட உதவி இயக்குநர்
திருமதி சபீர்பானு
பங்கு கொண்டனர்.

Add a Comment