POST: 2025-08-29T07:32:42+05:30

மங்கலம் என்ப மனமாட்சி

உண்ணும் சோறும், பருகும் நீரும், தின்னும் வெற்றிலையும் பாரதி என்னும் படிக்கே ஆட்பட்டு அப்பாவால் பாராட்டப்பட்ட நினைவில் வாழ்ந்த சொல்லின் செல்வர் பாரதி சுராஜ்(1928-2018) அவர்களின் திருமகன் இராமசாமி சுராஜ்
திருமதி பூமா இணையரின்
செல்வ மகள் மருத்துவர் அம்ருதா / மருத்துவர் கேசவ் திருமணம் 28.08.2025, வியாழக்கிழமை,
காலை 9.00 மணியளவில் கலந்து கொண்டு வாழ்த்தினேன்.

மங்கல நிகழ்வில் பாரதி சுராஜ் அவர்களின் அருமை தங்கையும், ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியரும், இனிய நண்பர் வழக்கறிஞர் சதிஷின் தாயாருமான திருமதி வசந்தா சீனிவாசன் அவர்களின் அன்பு அரவணைப்பில் நெகிழ்ந்தேன்.

கூடுதல் தகவல் :

எந்தையாரின் இனிய நண்பரான சென்னியப்ப முதலியார் தியாகராயர் நகரில் உள்ள தெற்கு போக் சாலையில் வாழ்ந்த இல்லம் தான் இன்று ஓங்கி நிற்கும் கிருஷ்ணசாமி திருமணக் கூடமாகும்.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *