தமிழ் வளர்ச்சித் துறையின் கிருஷ்ணகிரி மற்றும்
தருமபுரி அலுவலகங்கள் ஆய்வு
3.9.25 புதன்கிழமை அன்று மதியம் 2 மணியளவில் கிருஷ்ணகிரி ஆட்சியர் அலுவலத்தில் 2007 ஆம் ஆண்டு முதல் இயங்கி வரும் தமிழ் வளர்ச்சித் துறையின் உதவி இயக்குநர் அலுவலகத்தினையும் அவ்வண்ணமே மாலை 5 மணி அளவில் தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 1983 ஆம் ஆண்டு முதல் இயங்கி வரும் தமிழ் வளர்ச்சித் துறையின் உதவி இயக்குநர் அலுவலகத்தின் செயலாக்கப் பணிகளோடு பல்வேறு அலுவல் காப்புப் பதிவேடுகளையும் ஆய்வு செய்தேன்.
கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி ஆகிய இரு மாவட்டங்களையும் ஒருங்கிணைக்கும் உதவி இயக்குநர் திருமதி ஜோதிலட்சுமி மற்றும் தத்தம் மாவட்டங்களில் பணியாற்றும் தமிழ் வளர்ச்சித் துறையின் பணியாளர்களுடன் ஒருங்கே எடுத்துக்கொண்ட ஒளிப்படம்

Add a Comment