POST: 2025-09-25T08:06:08+05:30

புதிய வரவு … இனிய இலக்கு..
நீண்ட பயணம்….

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் திருக்கரங்களால் 22.9.25 திங்கட்கிழமை இளங்கலை மற்றும் முதுகலை தமிழ் இலக்கியம் பயின்ற மாணவர்களுக்கு மட்டுமே நடத்தப் பெற்ற தமிழ்நாடு தேர்வாணையத்தில் எழுத்துததேர்வில் (18.11.24 & 19.11.24)
வெற்றி பெற்று நேர்முகத்திலும்
(30.7.25) தெரிவு செய்யப் பெற்ற பதின்மூவர்
(எட்டு ஆடவர் & ஐந்து மகளிர்)
திரு. பா. விஜய பாண்டியன்
திரு ச.ந. விக்னேஷ், திரு வே மூர்த்தி,
திரு. தெ. சிவப்பிரகாஷ்
திரு. நீ. குறளரசர்,திரு.கு சந்திரன்
திரு இரா.பிரகாஷ், திரு. பெ. ராஜா
திருமதி வே. ரேவதி, திருமதி ந நிலா,
திருமதி பா. கனிமொழி, திருமதி சி. போது மணி திருமதி ம. ஜெகதீஸ்வரி
உதவி இயக்குநர்களாக பணி ஆணைகளை பெற்றனர்.

தமிழ் வளர்ச்சி இயக்கத்தில் அதே நாளில் பயிற்சி ஆணைகளை பெற்று கலந்துரையாடிய பொழுது
தமிழ் வளர்ச்சித் துறையின் வரலாற்றில் இது ஒரு சாதனை நிகழ்வாகும் என்றும் தமிழ் இலக்கியக் கல்வி கற்றவர்கள் தமிழ் வளர்ச்சித் துறையின் உதவி இயக்குநர்களாகப் பணி வாய்ப்புப் பெற்றுள்ளது தமிழுக்கான நற்காலம் மட்டுமல்ல பொற்காலமாகும் என்று சொல்லி மகிழ்ந்தேன்.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *