f96cf037-4fdc-428a-b791-92ce9f124bf2

ஈசன் எந்தை இணையடி நீழலே!

ஒளவைத் தமிழில், பெருந்தகைப் பெண்டிர்,
எம் அத்தையாய்.,
உரை எழுதிய எம் பாட்டனாரின் பிடித்த பெயர் ஆனாய்!

கீழ்வீதியின் மருமகளாக, தமிழ்த்தாமரை ஆனாய்.
மாமாவின் நெஞ்சத்துஉரன் ஆனாய்,

மக்களின் மடியாய் ஆனாய்.

எறும்புக்கும் சுறுசுறுப்பினைக் கற்றுத் தந்தாய்!

எத்தனையோ தாலாட்டுகளைப் பாடினாய்.

நன்மொழிக்கு நாயகியாய், எளிமையின் பொருட்சுவையாய்,
பொதுநலத்தின் பீடிகையாய், குறைநிரப்பும் நலம் செறிந்தாய்.

அன்பின் அடைக்கலமாய், பண்பின் உறைவிடமாய்,
அனைவருக்கும் துணையாய்,
இளையோருக்குத் தூணாய்,
உரைப்புமிகு கொள்கையாய், ஒழுக்கநெறி எடுத்துக்காட்டாய்,
சவியறத் தெளிந்தாய், குன்றென நிமிர்ந்து வாழ்ந்தாய்.

அலர்வாய் நீங்க, நீ அருள்வாய்! இதயமெலாம் இறையெனவே மகிழ்ந்தாய்!
இப்பெருங் குடும்பத்தில் வெற்றிடத்தை விட்டுச்சென்றாய்.
உம் தந்தை விடைபெற்ற மாதத்தில், காப்பியமானாய்.

எங்களை மறந்தாய்! எம்முள்ளத்தில் நிறைந்தாய்!

அத்தையா? தாயா என ஐயுறும்வண்ணம்அன்புமழை பொழிந்தாய்!

அன்பெனும் குடில் புகுந்தாய், எம்தாய்!!

ஔவை கண்ணன் அருள் பரதன்

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *