NOTE: 2011-05-23T14:50:13+05:30

பண்டைத் தமிழ் நூலின் பண்பெல்லாம் ஈத்துவக்குந்

தொண்டுபுரி ஒளவை துரைசாமி – தண்டமிழ்க்கு

வள்ளல்! தனியாண்மைச் செம்மல் ! வாழ்கபல

வெள்ளங்கள் வென்று விழைந்து ! 1

 

வாயில் தமிழ் முழக்கம் வாழ்வில் தமிழியக்கம்

பாயில் துயில்போதும் பைந்தமிழே -நோயில்

படுப்பினும் பண்டமிழின் பண்பார் பணி செய்

தெடுத்ததுரை சாமி புகழ் ஏற்று! 2

 

அவ்வையைப் போற்றுதும் அவ்வையைப் போற்றுதும்

செவ்வை உரை செழித்த சீர்த்தியால்!-ஒவ்வாப்

பகைநலிய பன்னலமும் பைந்தமிழ் போல் ஓங்கத்

தொகையுரை வேந்து வாழ்க சூழுந்து! 3

 

 

-புலவர் தி. நா .அறிவொளி

 

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *