POST: 2021-09-07T09:48:32+05:30

என் எதிரே விழுந்த இடி !

நாங்கள் 55 ஆண்டுகளாக பரிவோடு பழகிய எங்கள் எதிர் வீட்டில் நேற்று வரை வாழ்ந்த இனிய நண்பர் – ஈ.பி.ஜி நம்பியார்( 1.8.1932 _4.9.2021)

என்னிடம் எப்போதும் அன்பு பூண்டவர் –

பொதுப்பணிக்கு அவரைப்போலப் பங்கு கொண்டவர்கள் எவரும் இல்லை .

ஐயப்பன் திருக்கோயில் ,
பாரதிய வித்யா பவனம் ,
அறிஞர் வி ஆர் கிருஷ்ண ஐயர் முதலியோரை நினைவு கூர்ந்த பெருமிதம் .

எந்தப் பொதுமைக்கும் நானென்று முன்னின்றவர்..

நம்பியார் அவர்களின் துணைவியார் இலட்சுமி – வீட்டுப் பிள்ளைகள் ஷோபா,இராமதாசு ஏறக்குறைய 50 ஆண்டுகளாக எங்களோடு பழகியவர்கள் .

மூன்று நாளைக்கு முன்னர் அப்பல்லோ மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார் .

கதை முடிந்தது .

ஒப்பற்றவர் ,
ஊருக்கு உழைத்தவர் ,
உயர்ந்த பண்பாடு நிரம்பியவர் ,

நம்பியாரின் மறைவை அறிந்து என் மகன் அருள் என்னிடம் அழுது கொண்டே சொன்னது தாரா மறைந்த போது செழுமையான ஆங்கிலத்தில் தொலைபேசியில் இரங்கல் செய்தி சொன்னது உருக்கமாக இருந்தது என்று புலம்பினார் . தீ நுண்மி இடரால ஒராண்டுக்கும் மேலாக வீட்டுக்குள் இருந்தவரை மகள் ஷோபா கண்ணும் கருத்துமாக அருகில் இருந்து அரணாய் இருந்தது பெரிய ஆறுதலாகும்.

நம்பியார் நாட்டுக்கு நாயகர் .

ஆற்றொணாத் துயரத்தோடு

ஒளவை நடராசன்

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *