Arul.2009/FB/#6783 தமிழைக் காக்க தன்னுயிரை ஈந்த மாணவர் இராசேந்திரன் நினைவிடம் கடலூர் மாவட்டம் புவனகிரி வட்டம் பரங்கிப்பேட்டை அகரம் கிராமத்தில் அமைந்துள்ள மொழிப்போர் தியாகி திரு மு இராசேந்திரன் அவர்களின் நினைவிடத்தை புதுப்பிக்க வேண்டும் என்று ஆணையிட்ட மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவிப்புக்கிணங்க 6.11.25 வியாழக்கிழமையன்று கடலூர் தமிழ் வளர்ச்சித் துறை உதவி இயக்குநர் மற்றும் வட்டாட்சியர் முன்னிலையில் கள ஆய்வு நடைபெற்றது. நினைவிடத்தில் பொறிக்கப்பட்ட கல்வெட்டு வரிகள் நெகிழ வைத் ...
POST: 2025-11-12T09:38:39+05:30
"Arul.2009/FB/#6782 கற்கிலுங் கேட்கிலும் ஞானக் கருத்தூற நிற்கில் பரமவை வீடு" என ஔவை உரைக்கும் ஞானக்குறள் எண் முந்நூற்றுப்பத்து "தேடினும் தொடினும் தெளிவார்ந்த கருத்தூற வீட்டினில் பரப்பும் விழுமிய உலகத்தமிழிதழ் முந்நூற்றுப்பத்து"
POST: 2025-11-11T09:11:51+05:30
Arul.2009/FB/#6781 எங்கும் தமிழ்! எதிலும் தமிழ்! தமிழ் வளர்ச்சித் துறை தமிழறிஞர்களின் திருவுருவச் சிலைகளுக்கான விரைவுத் துலங்கல் குறியீடு (QR) அறிமுக விழா திருவள்ளுவராண்டு 2056 ஐப்பசி -25 நேரம்: காலை 10.00 மணி நாள்: 11.11.2025, செவ்வாய்க்கிழமை இடம்: தமிழ்நாடு டாக்டர் ஜெ ஜெயலலிதா இசை மற்றும் கவின்கலைப் பல்கலைக்கழக வளாகம் முதல் தளம், இராஜா அண்ணாமலைபுரம், சென்னை-600 009. வரவேற்புரை : ஒளவை அருள். இயக்குநர், தமிழ் வளர்ச்சித் துறை முன்னிலை திரு. ரெ.பாலகிருஷ்ணன் இ.ஆ.ப.(ப.நி.) தலைவர் உலக ...
POST: 2025-11-10T11:01:26+05:30
Arul.2009/FB/#6780 நல்லிதய செம்மல் நல்லி செட்டியார் 86ஆம் பிறந்தநாள் வாழ்த்து நாடறிந்த பெருந்தகையும் - நல்லவர் நெஞ்சிலெல்லாம் புகழ் மணக்க வாழும் பட்டு வணிகத் திலகமாகவும், இசை ,நாடகம், ஆடல், ஆவணம் மொழியாக்கம், தேசியம், தெய்வீகம் பாரதியும், உடல்நலம் , வணிக நுணுக்கம் முதலிய துறைகளில் தோய்ந்த பெருமிதம் கொண்டவரும் கலைகளைக் காக்கும் கரமாக மிளிரும் பத்மபூஷன் நல்லி செட்டியார் பழுத்த சிந்தனையும் , எழுத்து வன்மையும் ஒரு சேரக் கொண்டவர் . உள்ளத்தில் பட்டதை - உண்மை என்றுணர்ந்ததை உலகுக்கு ஏற ...
POST: 2025-11-09T11:36:41+05:30
Arul.2009/FB/#6779 தினமணி - 8 11 2025 சனிக்கிழமை நடுப்பக்க கட்டுரை (இரண்டாம் பகுதி) பக்கம் எண் : 8 தேம்பாவணி தந்த திருமகனார் முனைவர் ஒளவை அருள் இத்தாலி நாட்டிலிருந்து தமிழ்நாட்டுக்கு வந்து அருந்தமிழ்த் தொண்டு செய்த அருட் குருக்களில் சிறந்ததொரு பெருமகனார் வீரமாமுனிவர் (1680 - 1747 ). அகிலம் போற்றும் பெருங் கவிஞரான வெர்ஜில் பிறந்த நகருக்கு அருகிலுள்ள காஸ்திக்கிளியோனே என்பது இவர் பிறந்த ஊராகும். இவர் பிறந்தது 1680 -ஆம் ஆண்டு நவம்பர் 8 -ஆம் தேதி. இவர் தம் தந்தை பெயர் கண்டால்போ பெஸ்க ...
POST: 2025-11-08T11:44:11+05:30
Arul.2009/FB/#6778 எங்கும் தமிழ்! எதிலும் தமிழ்! கடந்த வியாழக்கிழமையன்று (6.11.25) மாலை 4.00 மணியளவில் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சி மொழித் தொடர்பான கலந்தாய்வுக் கூட்டத்தில் பங்கேற்று அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு ஆன்ற அறிவுரை வழங்கினேன். கோப்பு நடவடிக்கைகள் யாவும் அனைத்து நிலையிலும் நூற்றுக்கு நூறு தமிழிலேயே அமைய வேண்டும். அரசு ஆணைகள், மற்றும் அறிவுரைகளால் மட்டுமே ஆட்சி மொழித் திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்றிட முடியாது. அலுவலர்களின் ஈடுபாடு, ஆர்வம், தேடல், பணித்திறன ...
POST: 2025-11-07T07:36:33+05:30
Arul.2009/FB/#6777 https://youtu.be/4zCt8W1zvBY?si=FMp42LzregljWfmt உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் இரண்டாவது முதன்மைச் சாலை மையத் தொழில்நுட்பப் பயிலக வளாகம் தரமணி, சென்னை - 600 113. .. 044-22542992 உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் தொல்காப்பியர் ஆய்வு இருக்கை வெளியிட்டுள்ள பேராசிரியர் எஸ். தனிநாயகம் அடிகளாரின் பழந்தமிழ் இலக்கியங்களில் கல்விச் சிந்தனைகள் நூல் வெளியீட்டு விழா அழைப்பிதழ் நாள் : 07.11.2025 - வெள்ளிக்கிழமை நேரம் : காலை 10.00 மணி இடம் : பேரறிஞர் அண்ணா கருத்தரங்கக் கூடம், உலகத் த ...
POST: 2025-11-06T07:23:29+05:30
Arul.2009/FB/#6776 தமிழ் வளர்ச்சித் துறை இளையோர் இலக்கியப் பயிற்சிப் பாசறை கடலூர் மாவட்டம் 2025 - 2026 திருவள்ளுவராண்டு 2056 / ஐப்பசி 20 06.11.2025 இடம்: அண்ணாமலைப் பல்கலைக்கழகம், சிதம்பரம் பெருந்தகையீர்! வணக்கம் தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறை கல்லூரிகளில் நடத்தும் கவின்மிகு நிகழ்வு இளையோர் இலக்கியப் பயிற்சிப் பாசறை பூவில் விளையாடும் பொதிகைத் தென்றலாய் நாவில் தமிழாடும் நாவலர் பெருமக்கள் இதழ்கள் வழியே கட்டும் இலக்கியப் பந்தல்! தமிழும் தமிழரும் உயர வாழ்க்கையை வாரிக் கொடுத்த வள்ளல்களை ...
POST: 2025-11-05T10:40:22+05:30
Arul.2009/FB/#6775 நெகிழ்ந்த தோளும் வாடிய வரியும்" எனத் தொடங்கும் கபிலரின் நற்றிணைப் பாடல் எண் முந்நூற்(று) ஒன்பது; மகிழ்ந்த அறிவன் தோறும் முத்துத் தமிழள்ளித் தரும் உலகத்தமிழிதழ் முந்நூற்(று) ஒன்பது.
POST: 2025-11-04T10:56:57+05:30
Arul.2009/FB/#6774 மங்கலத் திருமண அழைப்பு அடக்கமும் பண்பும் அணி செய்யும் ஆற்றல் மாமணி, கல்வித்திலகம் கும்மிடிப்பூண்டிச் சட்டமன்ற உறுப்பினர், தலைமைச் செயற்குழு உறுப்பினர் திரு டி ஜே கோவிந்தராஜன் அவர்கள் 24.5.25 சனிக்கிழமையன்று தமிழ் வளர்ச்சி இயக்ககத்தில் என்னைக் கண்டு மகிழ்ச்சியுடன் தன் செல்வ மகனின் திருமண அழைப்பிதழ் வழங்கி மகிழ்ந்தார். அவ்வண்ணமே ஜூன் 8ஆம் தேதி நடைபெற்ற திருமண வரவேற்பில் டி.ஜே. தமிழரசன் ஹேமா ஆரத்தி மணமக்களை நேரில் சென்று வாழ்த்தி மகிழ்ந்தேன்.
