POST: 2025-12-03T09:37:31+05:30

Arul.2009/FB/#6803 "செய்யாமல் செற்றார்க்கும் என்று இன்னா செய்யாமை என்ற அதிகாரத்தில் தொடங்கும் திருக்குறள் எண் முந்நூற்றுப் பதின்மூன்று பொய்யாமல் அறிவன் கிழமை தோறும் உரியவர்களுக்குச் சென்று சேரும் உலகத்தமிழ் இதழ் முந்நூற்றுப் பதின்மூன்று"

POST: 2025-12-02T07:04:47+05:30

Arul.2009/FB/#6802 எந்தையார் ஒளவை நடராசன் போற்றிய ஆசிரியர் திலகத்தின் 93 ஆம் பிறந்த நாள் (2.12.2025) பெருமிதம் நாளும் வெல்க ! பிறந்த நாள் தொட்டே பகுத்தறிவுப் பிடிப்போடு தந்தை பெரியார் ஆரத்தழுவிய அருமந்த மகனாக வளர்ந்து நாளும் உயர்ந்து தன்மான இயக்கத்தையும் , திராவிடர் கழகத்தையும் கண் போலக் காப்பவர் தலைவர் வீரமணி . அல்லும் பகலும் அயராமல் இனமான எழுச்சி உரைகளையும், நிகரில்லாக் கல்விப் பணிகளையும் ஆற்றி இருண்டு கிடக்கும் திராவிட சமுதாயத்தை அங்குலம் அங்குலமாக உயர்த்தி வருபவர் ஆசிரிய ...

POST: 2025-12-01T08:04:35+05:30

Arul.2009/FB/#6801 எங்கும் தமிழ் ! எதிலும் தமிழ் ! தமிழ் வளர்ச்சித் துறை சென்னை மாவட்டம் ஆட்சிமொழித் திட்டப் பயிற்சி 79ஆம் அணி நாள்: திருவள்ளுவராண்டு 2056 / கார்த்திகை 15 2025 திசம்பர் 01 (திங்கட்கிழமை) இடம்: ஆதி திராவிட நல ஆணையரகக் கூட்டரங்கம். எழிலகம் இணைப்பு, முதல் தளம், சென்னை-600 005 பயிற்சி நிரல் முற்பகல் :10.00 - 10.30 : வருகைப் பதிவு வரவேற்புரை : திருமதி வே. சாந்தி தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர். தமிழ் வளர்ச்சி இயக்ககம். சென்னை-600 008 தொடக்கவுரை முனைவர் ந. அருள் தமிழ் வ ...

POST: 2025-11-30T09:27:54+05:30

Arul.2009/FB/#6800 ஓம் சக்தி - மாத இதழ் - தீபாவளி சிறப்பிதழ் பக்கம் எண் : 306,307,308. செயற்கரிய செயல் முனைவர் ஔவை அருள் இயக்குநர் தமிழ் வளர்ச்சித்துறை தமிழ்நாடு அரசு வினைத்திட்ப மென்ப தொருவன் மனத்திட்பம் மற்றைய யெல்லாம் பிற இங்கே பிளாரென்சு நைட்டிங்கேல் வாழ்க்கை நினைவுகூரத்தக்கது. இங்கிலாந்தில் பெருஞ்செல்வந்தருக்கு மகளாகப் பிறந்த பிளாரன்சு வளர்ந்து வந்த பொழுது தானொரு செவிலியாக வேண்டுமென்று பெரிதும் விரும்பினார். ஆனால், அக்காலத்தில் செவிலியரைப் பற்றி மிகவும் மோசமான கருத்து நிலவி ...

POST: 2025-11-29T11:32:07+05:30

Arul.2009/FB/#6799 சிந்தை மகிழ்விக்கும் முத்தமிழைப்போல மூன்று ஆய்வுக் கூட்டங்கள்! ஒரே நாளில் 28.11.25 வெள்ளிக்கிழமையன்று சென்னையில் அருகருகே அமைந்திருக்கும் அலுவலகங்களுக்கு மு.ப 11.15 மணியளவில் சாலைப் போக்குவரத்து நிறுவன அலுவலகத்திலும் பி.ப 12.30 மணியளவில் தமிழ்நாடு மாநிலச் சுகாதாரப் போக்குவரத்து இயக்கக அலுவலகத்திலும் மதியம் 1.30 மணியளவில் தொழில்நுட்பக் கல்வி இயக்கக அலுவலகத்திலும் ஆட்சி மொழி ஆய்வுக் கலந்தாய்வுக் கூட்டத்தில் பங்கு கொண்டு தலைமை தாங்கி நுண்ணாய்ந்த ஆய்வறிக்கைகளை ...

POST: 2025-11-28T10:14:16+05:30

Arul.2009/FB/#6798 ஆட்சி மொழி ஆய்வுக் கூட்டம் 27.11.25 வியாழக்கிழமை மாலை 5.00 மணியளவில் சென்னையிலுள்ள மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன அலுவலகத்தில் ஆட்சி மொழி ஆய்வு கலந்தாய்வுக் கூட்டத்தில் பங்கு கொண்டு நுண்ணாய்ந்த ஆய்வறிக்கையினை மாநிலக் கல்வியியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் திருமதி ந. லதா அவர்களிடம் வழங்கி உரையாற்றினேன். நிகழ்வில் தமிழ் வளர்ச்சித் துறையின் துணை இயக்குநர் திருமதி வே. ஜோதி, பயிற்சி உதவி இயக்குநர்கள் திரு. இரா. பிரகாஷ் , திரு. பெ. ராஜ ...

POST: 2025-11-27T10:23:43+05:30

Arul.2009/FB/#6797 உலகத் தமிழ்ச் சங்கம், மதுரை (தமிழ்நாடு அரசு நிறுவனம்) சிங்கப்பூர் கவிமாலை, சிங்கப்பூர்த் தமிழ் இலக்கியக் களம் சிங்கப்பூர்த் தமிழர் இயக்கம் இணைந்து நடத்தும் 'சிங்கப்பூர்த் தமிழ் இலக்கிய விழா 5 பன்னாட்டுக் கருத்தரங்கம், கவியரங்கம், வழக்காடு மன்றம், பன்னாட்டுப் படைப்பாக்கப் பயிலரங்கம், பட்டிமன்றம் அழைப்பிதழ் 26-27 | ឈ | 2025 அழைப்பின் மகிழ்வில் முனைவர் இ.சா. பர்வீன் சுல்தானா துணைத்தலைவர் / இயக்குநர், உலகத் தமிழ்ச் சங்கம், மதுரை நிகழ்விடம் திருவள்ளுவர் கலையரங்கம், உல ...

POST: 2025-11-26T09:48:09+05:30

Arul.2009/FB/#6796 ஈன்று புறந்தருதல் என்- தலைக் கடனே; சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே" எனப் பொன்முடியார் குறிக்கும் புறநானூற்றுப் பாடலெண் முந்நூற்றுப் பன்னிரண்டு! "ஆன்ற புகழொடு தோன்றி, அறிவொடு தமிழ் வளர்க்கும் உலகத் தமிழிதழ் முந்நூற்றுப் பன்னிரண்டு!"

POST: 2025-11-25T11:09:41+05:30

Arul.2009/FB/#6795 இலண்டன் க. சிவகுருநாத பிள்ளை என்கிற சிவாப் பிள்ளை (9.5.1942- 24.11.25) அருட்செல்வர் பொள்ளாச்சி மகாலிங்கம் அவர்களின் வாயிலாக அப்பாவுக்கு அறிமுகமானவர் அப்பாவின் நீண்ட கால நண்பர் இருபது ஆண்டுகளுக்கு முன்பு இலண்டனில் அவர் இல்லத்தில் விருந்து படைத்ததும் அவர் பணியாற்றிய இலண்டன் பல்கலைக்கழகத்தில் உள்ள கோல்ட்ஸ்மித் கல்லூரியில் அவரைச் சந்தித்து உரையாடியதும் என்னுடைய நினைவில் இன்றும் பசுமையாக உள்ளது. நீண்ட நெடுங்காலமாகத் தமிழ்க்கணினியுலகில் தனி முத்திரை பதித்து வருபவர். ச ...

POST: 2025-11-24T11:22:41+05:30

Arul.2009/FB/#6794 இணையத் தமிழ்ப் பயிலரங்கம் நிறைவு விழா அழைப்பிதழ் 21.11.2025 வெள்ளிக் கிழமை மாலை 4.00 மணி தமிழ் மொழித்துறைக் கருத்தரங்கக் கூடம் சென்னைப் பல்கலைக்கழகம், மெரினா வளாகம் வரவேற்புரை முனைவர் ய. மணிகண்டன் பேராசிரியர்-தலைவர், தமிழ் மொழித்துறை சென்னைப் பல்கலைக்கழகம் தலைமை முனைவர் ம. இராசேந்திரன் தலைவர், தமிழ் வளர்ச்சிக் கழகம் முன்னைத் துணைவேந்தர், தமிழ்ப் பல்கலைக்கழகம் சிறப்புரை திரு ரெ. பாலகிருஷ்ணன் இ.ஆ.ப. (ப.நி.) தலைவர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் வாழ்த்துரை முனைவர் ஒ ...