POST: 2024-12-06T10:01:09+05:30

அன்பின் வழியது உயிர்நிலை இனிய நண்பர் வழக்கறிஞர் சதீஷ் திருமதி இரஞ்சனி இணையரின் ஒரே மகன் அறிவுத்திலகம் சஸ்வத்குமார் பண்புத்திலகம் அனாகா திருமண உறுதி நிகழ்வில் (8.9.24) ஞாயிற்றுக்கிழமை காலை திருவான்மியூரில் அமைந்துள்ள துவாரகா வள மண்டபத்தில் கலந்து கொண்டு வாழ்த்தி மகிழ்ந்தேன். அன்றைய நிகழ்ச்சியில் கவிஞர் சதீஷின் தாயார் திருமதி வசந்தா சீனிவாசன் என்னைக் கண்டதும் பரிவு காட்டி அன்பாக வாழ்த்திய தருணம் நெகிழ்வாக அமைந்தது.

c6dba120-3faf-442a-8c68-be15d988e1c5

மழலை மலருக்குப்பண் பாடுவோம் !

பட்டிமன்ற பேச்சாளர் திருமதிஅனுகிரகா ஆதி பகவன், கவிஞர் தரன் இணையரின் மழலைச் செல்வம் ஆதினி பொற்பிறையின் முதலாண்டு பிறந்தநாள் விழாவில்(17.8.24) சனிக்கிழமையன்று மாலையில் அப்பாவின் செயலாளர்பொன்னேரி பிரதாப் மற்றும் ஆட்சி மொழிக் காவலர்கீ இராமலிங்கனாரின் பெயரன் கஜேந்திர பாபுவுடன் மழலைச் செல்வத்தை நேரில் கண்டு மகிழ்ந்து வாழ்த்தினேன்.

POST: 2024-12-05T07:20:53+05:30

மழலை மலருக்குப் பண் பாடுவோம் ! பட்டிமன்ற பேச்சாளர் திருமதிஅனுகிரகா ஆதி பகவன், கவிஞர் தரன் இணையரின் மழலைச் செல்வம் ஆதினி பொற்பிறையின் முதலாண்டு பிறந்தநாள் விழாவில்(17.8.24) சனிக்கிழமையன்று மாலையில் அப்பாவின் செயலாளர் பொன்னேரி பிரதாப் மற்றும் ஆட்சி மொழிக் காவலர் கீ இராமலிங்கனாரின் பெயரன் கஜேந்திர பாபுவுடன் மழலைச் செல்வத்தை நேரில் கண்டு மகிழ்ந்து வாழ்த்தினேன்.

Capture

உலகத்தமிழ் இதழ்-261

"உற்றநோய் நோன்றல்"என்று தவத்தை வரையறுத்துத் தொடங்கும் அருங்குறள் இருநூற்(று) அறுபத்(து) ஒன்று; கற்றாய்ந்த அருந்தமிழைச் செழுமையான கட்டுரைகள் வாயிலாக வெளியிடும் உலகத் தமிழிதழ்இருநூற்(று) அறுபத்(து) ஒன்று. 261 உலகத்தமிழ் 04122024 (1)Download

POST: 2024-12-04T04:58:31+05:30

"உற்றநோய் நோன்றல்" என்று தவத்தை வரையறுத்துத் தொடங்கும் அருங்குறள் இருநூற்(று) அறுபத்(து) ஒன்று; கற்றாய்ந்த அருந்தமிழைச் செழுமையான கட்டுரைகள் வாயிலாக வெளியிடும் உலகத் தமிழிதழ் இருநூற்(று) அறுபத்(து) ஒன்று.

c90c4f15-69cb-48c5-b463-140ecaa00cf7

பெருமிதம் நாளும் வெல்க!

எந்தையார் ஒளவை நடராசன் தன் வாழ்நாள் எல்லாம் போற்றிய ஆசிரியர் திலகத்தின் 92ஆம் பிறந்த நாள் (2.12.2024) அன்று ஆசிரியரின் அடையாறு இல்லத்திற்கு நேரில் சென்று சங்கவிலக்கிய எழிலேடு வழங்கி சால்வை சூடி மகிழ்ந்தேன். பிறந்த நாள் தொட்டே பகுத்தறிவுப் பிடிப்போடுதந்தை பெரியார்ஆரத்தழுவிய அருமந்த மகனாக வளர்ந்து நாளும் உயர்ந்துதன்மான இயக்கத்தையும் ,திராவிடர் கழகத்தையும்கண் போலக்காத்து வருபவர்தலைவர் வீரமணி . அல்லும் பகலும் அயராமல்இனமான எழுச்சி உரைகளையும்நிகரில்லாக் கல்விப் பணிகளையும் ஆற்ற ...

POST: 2024-12-03T07:13:46+05:30

பெருமிதம் நாளும் வெல்க! எந்தையார் ஒளவை நடராசன் தன் வாழ்நாள் எல்லாம் போற்றிய ஆசிரியர் திலகத்தின் 92ஆம் பிறந்த நாள் (2.12.2024) அன்று ஆசிரியரின் அடையாறு இல்லத்திற்கு நேரில் சென்று சங்கவிலக்கிய எழிலேடு வழங்கி சால்வை சூடி மகிழ்ந்தேன். பிறந்த நாள் தொட்டே பகுத்தறிவுப் பிடிப்போடு தந்தை பெரியார் ஆரத்தழுவிய அருமந்த மகனாக வளர்ந்து நாளும் உயர்ந்து தன்மான இயக்கத்தையும் , திராவிடர் கழகத்தையும் கண் போலக்காத்து வருபவர் தலைவர் வீரமணி . அல்லும் பகலும் அயராமல் இனமான எழுச்சி உரைகளையும் நிகரில்ல ...

ee0e5190-97dd-4615-bfdf-86c9ddae2066

அப்பாவின் ஈர்ப்பு -தொடர் காவியம்

அப்பா மறைந்து ஈராண்டுகள் கடந்தும் ஈரமான அவரின் நினைவுகளைப் பலர் பல நிலைகளில் என்னிடம் தொடர்ந்து பகிர்ந்து வருகிறார்கள். அதில் குறிப்பாக அப்பாவுடன் மிக நெருக்கமாகத் தன் பள்ளிப்பருவநாள் முதல் பழகத் தொடங்கி அடக்கமாக செயலாற்றிய அன்பு இளவல் கலாநிதி தன்னுடைய திருமணம், மக்கள் செல்வங்கள், வணிகத் தொடர்புகள் என்று வளர்ந்த சூழலிலும் அப்பாவை தொடர்ந்து கொண்டாடுபவர்… இன்றும் எங்கள் அண்ணா நகர் தாரகை இல்லத்தில் நாள்தோறும் விடியற்காலை பெற்றோர்க ...

POST: 2024-12-02T06:02:14+05:30

விழிகளைக் கவரும் ஊடக வெளிச்சம் தமிழ் வளர்ச்சித் துறையின் பெருமிதமான திட்டங்களை செய்தித்துறையின் ஊடக மையம் (Media Hub)வாயிலாக வண்ணமயமான வடிவங்களில் வெளியிடுவதைக்கண்டு தமிழுலகம் பாராட்டி மகிழ்கிறது.

POST: 2024-12-01T08:42:30+05:30

அப்பாவின் ஈர்ப்பு - தொடர் காவியம் அப்பா மறைந்து ஈராண்டுகள் கடந்தும் ஈரமான அவரின் நினைவுகளைப் பலர் பல நிலைகளில் என்னிடம் தொடர்ந்து பகிர்ந்து வருகிறார்கள். அதில் குறிப்பாக அப்பாவுடன் மிக நெருக்கமாகத் தன் பள்ளிப்பருவநாள் முதல் பழகத் தொடங்கி அடக்கமாக செயலாற்றிய அன்பு இளவல் கலாநிதி தன்னுடைய திருமணம், மக்கள் செல்வங்கள், வணிகத் தொடர்புகள் என்று வளர்ந்த சூழலிலும் அப்பாவை தொடர்ந்து கொண்டாடுபவர்... இன்றும் எங்கள் அண்ணா நகர் தாரகை இல்லத்தில் நாள்தோறும் விடியற்காலை பெற்றோர்கள் ஒளிப்படங்களுக ...