POST: 2024-12-18T06:11:00+05:30

பிறை வனப்பு இழந்த நுதலும்... எனத் தொடங்கும் இளவெயினனாரின் நற்றிணைப்பாடல் இருநூற்(று) அறுபத்(து) மூன்று; நிறை வனப்பு நிறைந்த அருந்தமிழ்க் கட்டுரைகளை அள்ளித்தரும் உலகத்தமிழிதழ் இருநூற்(று) அறுபத்(து) மூன்று.

882c9625-50bd-4497-a904-148941a6e384

திருப்பாவை பேருரை

பத்மஸ்ரீ முனைவர் ஔவை நடராசன் =================================== பாடல் - 2 ======== வையத்து வாழ்வீர்காள்! வையத்து வாழ்வீர்காள்! நாமும் நம்பாவைக்குச்செய்யும் கிரிசைகள் கேளீரோ பாற்கடலுள்பையத் துயின்ற பரமனடி பாடிநெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடிமையிட்டு எழுதோம் மலரிட்டு நாம்முடியோம்செய்யாதன செய்யோம் தீக்குறளைச் சென்றோதோம்ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டிஉய்யுமா றெண்ணி உகந்தேலோர் எம்பாவாய். திருப்பாவை செய்யுள்.2 எதைச் செய்தாலுமே நல்ல முறையில் திருத்த ...

POST: 2024-12-17T04:37:48+05:30

17.12.2024 செவ்வாய்க்கிழமை திருப்பாவை பேருரை •••••••••••••••••••••••••••••••• பத்மஸ்ரீ முனைவர் ஔவை நடராசன் =================================== பாடல் - 2 ======== 2. வையத்து வாழ்வீர்காள்! வையத்து வாழ்வீர்காள்! நாமும் நம்பாவைக்குச் செய்யும் கிரிசைகள் கேளீரோ பாற்கடலுள் பையத் துயின்ற பரமனடி பாடி நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி மையிட்டு எழுதோம் மலரிட்டு நாம்முடியோம் செய்யாதன செய்யோம் தீக்குறளைச் சென்றோதோம் ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி உய்யுமா றெண்ணி உகந்தேலோர் எம்பாவாய். ...

POST: 2024-12-16T04:24:43+05:30

மார்கழி 1 16.12.2024 திருப்பாவை பேருரை •••••••••••••••••••••••••••••••• பத்மஸ்ரீ முனைவர் ஔவை நடராசன் =================================== பாடல் - 1 ======== "மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளால் நீராடப் போதுவீர்! போதுமினோ நேரிழையீர்! சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்! கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன் ஏரார்ந்த கண்ணி யசோதை யிளஞ்சிங்கம் கார்மேனிச்செங்கண் கதிர்மதியம் போல்முகத்தான் நாராயணனே! நமக்கே பறை தருவான் பாரோர் புகழப் படிந்தேலோ ரெம்பாவாய்!" ...

POST: 2024-12-15T22:31:41+05:30

தமிழ் வளர்ச்சித் துறை நடத்தும் இளந்தமிழர் இலக்கியப் பயிற்சிப் பட்டறை மதுரை உலகத் தமிழ்ச் சங்கம் முதல் நாள் நிகழ்ச்சி 15.12.24 ஞாயிற்றுக்கிழமை

POST: 2024-12-14T16:16:28+05:30

இரங்குகிறேன் எளிமையின் உருவமாகவும் எந்நேரமும் திராவிடப் பல்கலைக்கழகத்தின் பணிகளைக் குறித்து மட்டுமே தொலைபேசி வாயிலாகவும் நேரிலும் பேசி வந்த நண்பர் தான் முனைவர் பா. ஆ முனுசாமி அவர்கள் ஆவார்கள்.. தமிழ் வளர்ச்சித் துறையின் மேனாள் இயக்குநர் முனைவர் கா.மு. சேகர் அவர்களின் வகுப்புத் தோழர் திருப்பதி திருவேங்கடவன் பல்கலைக்கழகத்தின் தமிழ்த் துறையில் முனைவர் பட்டமாக திருமூலரும் வேமண்ணா ஒப்பாய்வில் முனைவர் பட்டம் பெற்று கடந்த 21 ஆண்டுகளாக குப்பத்தில் உள்ள திராவிடப் பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழி மற்ற ...

POST: 2024-12-13T16:32:04+05:30

செய்தி வெளியீடு மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தில் 15.12.2024 முதல் 21.12.2024 வரை இளந்தமிழர் இலக்கியப் பயிற்சிப் பட்டறை நடைபெறவுள்ளது. தமிழ் வளர்ச்சித் துறை வாயிலாக கல்லூரி மாணாக்கர்களுக்கு நடத்தப்பெறும் கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெறும் 200 மாணாக்கர்களுக்கு இளந்தமிழர் இலக்கியப் பயிற்சிப் பட்டறை ஆண்டுதோறும் நடத்தப்பெற்று வருகிறது. அவ்வரிசையில், இந்த ஆண்டு தென்னகத்தின் தொன்னகரும் தேமதுரத் தமிழ்விளங்கும் பொன்னகரும் ஆகிப் புகழ்பூத்துக் குலுங்கும் நான்மாடக் கூடலில், இளந்தமிழர் இ ...

Capture

உலகத்தமிழ் இதழ் – 262

தண்புனக் கருவிளைக் கண்போல் மாமலர் …எனத் தொடங்கும் பெருந்தலைச் சாத்தனாரின் நற்றிணைப்பாடல் எண் இருநூற்(று) அறுபத்(து) இரண்டு; கண்போன்ற தமிழாய்ந்த அறிவார்ந்த அறிஞர்தம்அருங்கட்டுரைகளை ஐந்தாண்டுகளாய் அழகுற வெளியிட்டுவரும் உலகத் தமிழிதழ் இருநூற்(று) அறுபத்(து) இரண்டு. 262 உலகத்தமிழ் 11122024Download

POST: 2024-12-12T10:50:46+05:30

வாழ்த்து மழை புதிதாகப் பொறுப்பேற்றிருக்கும் தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் தலைவர் முனைவர் ம. இராசேந்திரன் அவர்களை 8.11.24 வெள்ளிக்கிழமையன்று மாலை ஐந்து மணி அளவில் சந்தித்து வாழ்த்தி பட்டாடை அணிவித்து மகிழ்ந்தேன். படத்தில் உடன் இருப்பவர்கள் முனைவர் திருமதி சாரதா நம்பி ஆரூரன் மற்றும் முது முனைவர் மருதநாயகம்.