POST: 2025-11-10T11:01:26+05:30

Arul.2009/FB/#6780 நல்லிதய செம்மல் நல்லி செட்டியார் 86ஆம் பிறந்தநாள் வாழ்த்து நாடறிந்த பெருந்தகையும் - நல்லவர் நெஞ்சிலெல்லாம் புகழ் மணக்க வாழும் பட்டு வணிகத் திலகமாகவும், இசை ,நாடகம், ஆடல், ஆவணம் மொழியாக்கம், தேசியம், தெய்வீகம் பாரதியும், உடல்நலம் , வணிக நுணுக்கம் முதலிய துறைகளில் தோய்ந்த பெருமிதம் கொண்டவரும் கலைகளைக் காக்கும் கரமாக மிளிரும் பத்மபூஷன் நல்லி செட்டியார் பழுத்த சிந்தனையும் , எழுத்து வன்மையும் ஒரு சேரக் கொண்டவர் . உள்ளத்தில் பட்டதை - உண்மை என்றுணர்ந்ததை உலகுக்கு ஏற ...

POST: 2025-11-09T11:36:41+05:30

Arul.2009/FB/#6779 தினமணி - 8 11 2025 சனிக்கிழமை நடுப்பக்க கட்டுரை (இரண்டாம் பகுதி) பக்கம் எண் : 8 தேம்பாவணி தந்த திருமகனார் முனைவர் ஒளவை அருள் இத்தாலி நாட்டிலிருந்து தமிழ்நாட்டுக்கு வந்து அருந்தமிழ்த் தொண்டு செய்த அருட் குருக்களில் சிறந்ததொரு பெருமகனார் வீரமாமுனிவர் (1680 - 1747 ). அகிலம் போற்றும் பெருங் கவிஞரான வெர்ஜில் பிறந்த நகருக்கு அருகிலுள்ள காஸ்திக்கிளியோனே என்பது இவர் பிறந்த ஊராகும். இவர் பிறந்தது 1680 -ஆம் ஆண்டு நவம்பர் 8 -ஆம் தேதி. இவர் தம் தந்தை பெயர் கண்டால்போ பெஸ்க ...

POST: 2025-11-08T11:44:11+05:30

Arul.2009/FB/#6778 எங்கும் தமிழ்! எதிலும் தமிழ்! கடந்த வியாழக்கிழமையன்று (6.11.25) மாலை 4.00 மணியளவில் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சி மொழித் தொடர்பான கலந்தாய்வுக் கூட்டத்தில் பங்கேற்று அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு ஆன்ற அறிவுரை வழங்கினேன். கோப்பு நடவடிக்கைகள் யாவும் அனைத்து நிலையிலும் நூற்றுக்கு நூறு தமிழிலேயே அமைய வேண்டும். அரசு ஆணைகள், மற்றும் அறிவுரைகளால் மட்டுமே ஆட்சி மொழித் திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்றிட முடியாது. அலுவலர்களின் ஈடுபாடு, ஆர்வம், தேடல், பணித்திறன ...

POST: 2025-11-07T07:36:33+05:30

Arul.2009/FB/#6777 https://youtu.be/4zCt8W1zvBY?si=FMp42LzregljWfmt உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் இரண்டாவது முதன்மைச் சாலை மையத் தொழில்நுட்பப் பயிலக வளாகம் தரமணி, சென்னை - 600 113. .. 044-22542992 உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் தொல்காப்பியர் ஆய்வு இருக்கை வெளியிட்டுள்ள பேராசிரியர் எஸ். தனிநாயகம் அடிகளாரின் பழந்தமிழ் இலக்கியங்களில் கல்விச் சிந்தனைகள் நூல் வெளியீட்டு விழா அழைப்பிதழ் நாள் : 07.11.2025 - வெள்ளிக்கிழமை நேரம் : காலை 10.00 மணி இடம் : பேரறிஞர் அண்ணா கருத்தரங்கக் கூடம், உலகத் த ...

POST: 2025-11-06T07:23:29+05:30

Arul.2009/FB/#6776 தமிழ் வளர்ச்சித் துறை இளையோர் இலக்கியப் பயிற்சிப் பாசறை கடலூர் மாவட்டம் 2025 - 2026 திருவள்ளுவராண்டு 2056 / ஐப்பசி 20 06.11.2025 இடம்: அண்ணாமலைப் பல்கலைக்கழகம், சிதம்பரம் பெருந்தகையீர்! வணக்கம் தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறை கல்லூரிகளில் நடத்தும் கவின்மிகு நிகழ்வு இளையோர் இலக்கியப் பயிற்சிப் பாசறை பூவில் விளையாடும் பொதிகைத் தென்றலாய் நாவில் தமிழாடும் நாவலர் பெருமக்கள் இதழ்கள் வழியே கட்டும் இலக்கியப் பந்தல்! தமிழும் தமிழரும் உயர வாழ்க்கையை வாரிக் கொடுத்த வள்ளல்களை ...

POST: 2025-11-05T10:40:22+05:30

Arul.2009/FB/#6775 நெகிழ்ந்த தோளும் வாடிய வரியும்" எனத் தொடங்கும் கபிலரின் நற்றிணைப் பாடல் எண் முந்நூற்(று) ஒன்பது; மகிழ்ந்த அறிவன் தோறும் முத்துத் தமிழள்ளித் தரும் உலகத்தமிழிதழ் முந்நூற்(று) ஒன்பது.

POST: 2025-11-04T10:56:57+05:30

Arul.2009/FB/#6774 மங்கலத் திருமண அழைப்பு அடக்கமும் பண்பும் அணி செய்யும் ஆற்றல் மாமணி, கல்வித்திலகம் கும்மிடிப்பூண்டிச் சட்டமன்ற உறுப்பினர், தலைமைச் செயற்குழு உறுப்பினர் திரு டி ஜே கோவிந்தராஜன் அவர்கள் 24.5.25 சனிக்கிழமையன்று தமிழ் வளர்ச்சி இயக்ககத்தில் என்னைக் கண்டு மகிழ்ச்சியுடன் தன் செல்வ மகனின் திருமண அழைப்பிதழ் வழங்கி மகிழ்ந்தார். அவ்வண்ணமே ஜூன் 8ஆம் தேதி நடைபெற்ற திருமண வரவேற்பில் டி.ஜே. தமிழரசன் ஹேமா ஆரத்தி மணமக்களை நேரில் சென்று வாழ்த்தி மகிழ்ந்தேன்.

POST: 2025-11-03T11:21:21+05:30

Arul.2009/FB/#6773 நவில்தொறும் நூல் நயம் போல... இந்திரா காந்தி தேசியப்பண்பாட்டு மையப் புதுவை மண்டலத்தின் ஒருங்கிணைப்பாளர் திரு சுமித் டே 24.5.25 சனிக்கிழமையன்று தமிழ் வளர்ச்சி இயக்கக அலுவலகத்தில் என்னைக் கண்டு பேசினார். திருக்குறள் தொடர்பான மொழிபெயர்ப்பு நூல்களைக் கண்டு பாராட்டி மகிழ்ந்தார்.

POST: 2025-11-02T11:21:51+05:30

Arul.2009/FB/#6772 கண்டு கேட்டு உண்டு உயிர்த்து உற்றறிந்து உளமகிழ்வு கொண்ட இனிய தருணம் குடந்தையிலுள்ள புகழ்பெற்ற சிவகுருநாதர் செந்தமிழ் நூல் நிலையத்தை(நாணயக்காரத் தெரு) 9.10.25 வியாழக்கிழமையன்று மாலை 4 மணியளவில் கண்டு மகிழ்ந்தேன். அறிவுத் திருக்கோயிலின் அனைத்துப் பொருண்மைகளைக் கொண்ட நூலகத்தினை நிலைத்த புகழோடு நடத்திவரும் அறங்காவலர் பேராசிரியர் இராமகுருநாதன் அவர்களைச் சந்தித்து அளவளாவினேன். நூலகத்தின் உயரத்தையும், பரப்பினையும், அரிய நூல்கள் தொகுப்பினையும் கண்டு மலைத்தேன். மிகப்பழைமையான ந ...

POST: 2025-11-01T11:35:48+05:30

Arul.2009/FB/#6771 வாழ்ந்த பின்னும் வாழுகிறார் உரைவேந்தர் ஔவை துரைசாமி _________________________________________ உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் வாயிலாக வெளியிடப்பட்ட பேராசிரியர் சோ.ந .கந்தசாமி அவர்களின் உரைவேந்திரன் உரைமாட்சி நூலுக்கான திறனாய்வுப் பகுதி தினத்தந்தி, குமுதம், தினமணி,தமிழ் இந்து இதழ்களில் வெளிவந்த பதிவுக் களஞ்சியம்.... 1 தினத்தந்தி பக்கம் 8 நாள்: 02.09.2025 உரைவேந்தரின் உரைமாட்சி தமிழில் புலமை மிக்கவரான அவ்வை துரைசாமிப்பிள்ளை, பழங்கால தமிழ் இலக்கியங்களுக்கு உரை எழுதிப ...