ஆங்கில மொழிப் பேரறிஞர்களான எமனோ பர்ரோ ஆகிய இருவரும் திராவிட மொழிகளின் சொற்பிறப்பியல் அகரமுதலியை வெளியிட்டனர். ஒரு சொல் ஏன் பிறந்தது? எவ்வாறு பிறந்தது? அதன் வேர்மூலம் காண்பது என்ற வகையில் மொழியின் ஆழ்ந்த புலமையால் ஆராய்ந்து காண்பதே இந்த அகரமுதலியின் நோக்கமாகும்....
POST: 2011-12-16T06:33:33+05:30
நாடகம் என்பது வெறும் நள்ளிரவுச் சத்தம். பொழுதுபோக்குக்காக போர்க்காட்சிகளையும், காதல் காட்சிகளையும் கண்டு மகிழ்ந்து மக்களை சோம்பலாக்குவது என்று ஒரு காலத்தில் ஏளனமாக் நினைத்தார்கள். இப்போது ஊடகங்களின் ஒப்பற்ற அரசியாகத் திரைப்படம் தான் திகழ்கிறது. கண், காது, கருத்து என்ற மூன்றையும் ஒரே நேரத்தில் கவர்ந்து ஏழாவது அறிவு மட்டுமல்ல எட்டாவது அறிவையும் தொட்டு நிற்கிற சிகரத்தை நோக்கி சினிமா சென்றுகொண்டிருக்கிறது.....
POST: 2011-12-16T06:31:32+05:30
பாலி மொழி அழிந்து விட்ட மொழி என்று விக்கிபீடியா சொல்கிறது.இந்தியாவில் உள்ள பீகார் மாநிலத்தில் நலந்தாவில் செயல்பட்டுவரும் நவநலந்தா மகாவிஹாராவில் பாலி மொழியில் சான்றிதழ், பட்டய, இளநிலை, முதுநிலை, ஆய்வுநிலை படிப்புநிலைகள் உள்ளன.
POST: 2011-12-13T18:15:16+05:30
Never Call it as Air India,it is Unfair India adding insult for the passengers becoming more painful and impatient...
POST: 2011-12-08T15:07:21+05:30
பூதம் என்ற சொல் இன்னும் புரியாமல் இருக்கிறதே! பூத்தல் என்பது பூதமாயிற்று என்றார் பாவாணர்.இன்னொரு சான்று சொன்னால் எவர்க்கும் விளங்கும்.பூதம் என்பது Basic Element என்ற அடிப்படையில் பிறந்த சொல்லாகும்.உலகம் என்பது இந்த சொல்லிருந்து உருவாயிற்று என்று இயற்பியலில் எவ்வாறு பிறந்தது என்று அறிஞர்கள் விளக்கலாம்.பஞ்ச பூதம் என்ற சொல்லை எளிய பிள்ளைகளுக்கு எப்படி விளக்குவது?
POST: 2011-12-08T14:55:50+05:30
திருவண்ணமலையில் தீபம்! ஐயப்பனுக்கோ தீராத கோபம்!! அணையை உடைக்க ஆர்பரிப்போர் பலர் அணையாத தீபம் அதோ பார் என்பார் பலர். அண்ணாமலைக்கு அரோகரா! அணைக்கும் குளத்திற்கு அர கர அரோகரா!
POST: 2011-12-08T13:57:13+05:30
இந்த நடையில் எவனால் படிக்க முடியும் என்று பள்ளி மாணவர்கள் முழக்கமிட்டதால் Tony Blair,Shakespeare பாடத்தையே எடுக்கச்சொன்னார்.பிறகுதான் Shakespeare in Modern English,Shakespeare in Easy english,Shakespeare for elementary students என்று புதிய பதிப்புகள் பூத்தபடி இருக்கின்றன.அதுபோல நம்முடைய சங்கவிலக்கியங்களையும் எளிதில் விளங்க உரைநடை வடிவங்கள்,துண்டு துண்டு செய்திகள்,ஒரு பக்கத்தில் செய்யுளையும் மறுபாதியில் எளிய உரை நடையையும் எழுதி பதிப்பிக்க வேண்டும். . .
POST: 2011-12-08T12:45:17+05:30
ஆங்கிலேயர்களுக்கு நீதி அழகென்றும்.பிரெஞ்சுகாரர்களுக்கு வீதி அழகென்றும் சொல்வார்கள்.நேர்கோடுகளைப்போல நெளியாமல் வளையாமல் செல்லும் சாலைகள் தான் நாட்டுக்கு நரம்புகளாகும். நரம்பு கோணிடில் நாசம் வந்திடும் என்பது பழம்பாட்டின் வரி,சாலைகளைக்கொண்டு தான் ஒரு நாட்டை மதிப்பிட முடியும்.பத்து வயதிலிருந்து நான் பார்த்து வரும் இடங்களில் இன்று வரை மழைக்காலங்களில் தேங்கிய நீர்த்திட்டுகள் இன்றும் நிலவுகின்றன.ஈரத்தில் வாழும் எருமைகளாக தமிழர்கள் இருக்கிறார்கள் என்று பாரதியார் அன்றே அழுதார்.சாலைகள சீர்திருத்தினால் ...
